செங்கொடி கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் தரத் தயார்-முஸ்தபா கமால்

அதேநேரம் ஒழுங்காக விமர்சனங்களுக்கு பதில்கூறும் துணிவு இன்னமும் மிச்சமிருப்பதாக நண்பர் கருதினால், கேட்க்கப்படும் கேள்விகளுக்கு பதில்தரத் தயார் என ஒற்றை வரியை பதிலாகத் தரட்டும். அவர் விரும்பும் எல்லை வரையிலும் விளக்கவும் விவரிக்கவும் விவாதிக்கவும் நான் தயார். நண்பர் தயாரா?–செங்கொடி

இஸ்லாம் ஒரு பன்னீர்க் கடல் ! பன்னீர்க் கடல் சாக்கடைகளிடம் விளக்கம் பெறவேண்டிய இழி நிலை எப்போதும் ஏற்ப்பட்டதில்லை ! இஸ்லாத்தைப் பற்றி தவறான புரிதலோடு தறி கெட்டு நெறி கெட்டு கொடிபிடிக்கும் சென்கொடியே தனக்கு ஏற்படும் சந்தேகங்களை கேள்விகளாக்கி விவாதிக்க வரலாம். இன்ஷா அல்லாஹ் பதில் தரக் காத்திருக்கிறேன் !பி. எம் கமால், கடையநல்லூர். 

நண்பர் முஸ்தபா,
மற்றெல்லா மதங்களைப் போலவே இஸ்லாமும் இன்றைய நிலையில் தேங்கிப்போன சாக்கடை என்பதில் எனக்கு ஐயமொன்றுமில்லை. அதன் வாசம் பன்னீர் போல உங்களுக்குத் தெரிந்தால் உரிய ஒரு தலைப்பை தேர்ந்தெடுங்கள். விவாதிப்போம். மாறாக அதில் கேள்வி கேட்டு உங்களிடம்(!) தெளிவடைய என்னிடம் ஐயம் ஒன்றுமில்லை.
இன்று முதல் நாள் கடக்கிறது. ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்து வாருங்கள் நான் காத்திருக்கிறேன்
செங்கொடித் தோழருக்கு
உங்களால் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் தரத் தயார் என்று நான் கூறிவிட்ட பிறகு ஏன் இந்த நழுவல் ?
நீங்கள்,  நான் விரும்பும் எல்லை வரையிலும் விளக்கவும் விவரிக்கவும விவாதிக்கவும் நான் தயார் என்று கூறிவிட்டு
அதில் கேள்வி கேட்டு உங்களிடம்(!) தெளிவடைய என்னிடம் ஐயம் ஒன்றுமில்லை. என்று பதில் கூறியிருக்கும் விதம் நழுவலாகவே Buy cheap Bactrim படுகிறது. தலைப்பைத் தேர்ந்தெடுத்து நீங்களே விவாதத்தை துவக்குங்கள். நான் என்னுடைய கருத்தை திருமறை ஒளியில்  நபிவழியில் தெரிவிக்கிறேன். என்னுடைய கருத்துக்களை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும்  உங்கள் இஷ்டம்.
பி. எம் கமால்

Add Comment