சென்னை அண்ணா சாலையில் 4 மாடி கட்டிடத்தில் தீ: போக்குவரத்து ஸ்தம்பித்தது

சென்னை, ஜுன் 14 (டிஎன்எஸ்) சென்னை அண்ணா சாலை ஆனந்த் தியேட்டர் சிக்னல் அருகே உள்ள 4 மாடிக் கட்டிடத்தின் தரை தளத்தில் ஓட்டல், முதல் தளத்தில் வங்கி, 2-ம் தளத்தில் ரசாயன பொருட்கள் நிறுவனம், 3-வது தளத்தில் சிமெண்ட் நிறுவன அலுவலகம் ஆகியவை செயல்பட்டு வருகிறது.

இன்று காலை 9 மணியளவில் ரசாயன பொருள் நிறுவன உரிமையாளர் ஜிக்னேஷ் அலுவலகத்துக்கு வந்தார். இந்த நிறுவனத்தில் அச்சு எந்திரங்களுக்கு தேவையான பிளேட் தயாரிக்கப்படும். இதற்கு பயன்படுத்துவதற்காக ரசாயன பொருட்கள் நிறைய இருந்தது. ஜிக்னேஷ் அலுவலக கதவை திறந்து ஏ.சி.யை ஆன் பண்ணினார். அப்போது திடீரென்று தீ பிடித்து கரும்புகை சூழ்ந்தது. இதனால் அலுவலகத்தை விட்டு வெளியே ஓடி வந்த ஜிக்னேஷ் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.

2-ம் தளம் முழுவதும் கரும்புகை மூட்டத்துடன் ஜன்னல்கள் வழியாக குபு குபு என்று புகை வந்தது. இதனால் பீதியடைந்து மற்ற தளங்களில் இருந்த அனைவரும் வெளியே ஓடி வந்தனர்.

தீ பிடித்ததை வேடிக்கை பார்க்க பெருங்கூட்டம் கூடியது. தீயணைப்பு வண்டிகளும் ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்ததால் அண்ணா சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வெகுதூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த போலீசார் மிகவும் சிரமப்பட்டனர்.

தேனாம்பேட்டை, எழும்பூர், அடையாறு பகுதிகளில் இருந்து 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன. ஜன்னல்கள் வழியாக தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர்.

ரசாயன பொருட்களில் Buy Cialis தீ பிடித்ததால் தண்ணீரை அடித்ததும் மேலும் தீ கொளுந்து விட்டு எரிய தொடங்கியது. காலை 9.30 மணி முதல் மதியம் 12 மணி வரை போராடியும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. ரசாயன தீயை அணைக்கும் நுரை, மற்றும் வாயுக்களை செலுத்தி தீயை அணைத்தனர். (டிஎன்எஸ்)

Add Comment