2ஜி’அலைக்கற்றை ஊழல் : தயாநிதியிடம் சி.பி.ஐ. விரைவில் விசாரணை

‘2ஜி’அலைக்கற்றை ஊழல் : தயாநிதியிடம் சி.பி.ஐ. விரைவில் விசாரணை. ‘2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், 2001 முதல், 2007ம் ஆண்டு வரை நடந்த ஒதுக்கீடுகள் குறித்து, சி.பி.ஐ., புதிதாக வழக்கு பதிவு செய்ய உள்ளது. இது தொடர்பாக, மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக பொறுப்பு வகித்த தயாநிதியிடம் விரைவில் விசாரணை நடத்தும் என தெரிகிறது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் குறித்து, Buy cheap Cialis சி.பி.ஐ., தீவிர விசாரணை நடத்தி வருகிறது. முதலில் வருபவர்களுக்கு முதல் வாய்ப்பு என்ற அடிப்படையில், அனுபவம் இல்லாத கம்பெனிகளுக்கு எல்லாம் ஒதுக்கீடு அள்ளி வீசப்பட்டுள்ளது. எனவே, இது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்திய நீதிபதி, 2001 முதல், 2007ம் ஆண்டு வரை நடந்துள்ள ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகள் குறித்து, முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார். இதனால், இந்த விவகாரம் மேலும் விஸ்வரூபம் எடுத்தது. இதைத் தொடர்ந்து, 2003-04ம் ஆண்டு மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த அருண் ஷோரியிடம், கடந்த பிப்ரவரி 25ம் தேதி, சி.பி.ஐ., விசாரணை நடத்தி, அவரது ஆட்சிக் காலத்தில் நடந்த ஒதுக்கீடுகள் குறித்து விசாரணை நடத்தியது. தன் ஆட்சிக்காலத்தில் நடந்த ஒதுக்கீடுகள் குறித்து அருண் ஷோரி விளக்கம் அளித்தார். அவர் மீது எவ்வித குற்றச்சாட்டும் இருப்பதாக சி.பி.ஐ., எவ்வித தகவலையும் வெளியிடவில்லை.

Add Comment