ஆன்-லைன் மூலம் பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி பதிவு நெல்லை மாவட்டத்தில் 20ம் தேதி முதல் ஆரம்பம்

பள்ளிகளில் ஆன்-லைன் மூலம் எஸ்.எஸ்.எல்.சி கல்வி தகுதி பதிவு பணிகள் வரும் 20ம் தேதி முதல் ஆரம்பமாகிறது. எஸ்.எஸ்.எல்.சி கல்வி தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுக்காக ஒரே நாளில் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வந்து நீண்ட நேரம் காத்திருப்பதையும், கூட்ட நெரிசலில் சிக்கி தவிப்பதையும் தவிர்க்கும் வகையில் இந்த ஆண்டு அவரவர் பயின்ற பள்ளிகளிலேயே ஆன்-லைன் தீதீதீ.õங.மெநரடரெரடனனø.கவö.டங என்ற வெப்சைட் மூலம் Buy Viagra பதிவு பணிகள் மேற்கொள்ள தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இப்பதிவு செய்ய மாணவ, மாணவிகள் பெயர் இடம் பெற்றுள்ள ரேஷன் கார்டு நகல் மற்றும் சாதி சான்றிதழ் நகலை பள்ளி தலைமை ஆசிரியரிடம் கடந்த 11ம் தேதி முதல் வழங்கி வருகின்றனர். வரும் 19ம் தேதிக்குள் இவற்றை சமர்ப்பிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வரும் 20ம் தேதி முதல் ஜூலை மாதம் 5ம் தேதி வரை மாணவ, மாணவிகள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு பணிகள் மேற்கொள்ளப்படும். பதிவு செய்த அனைவருக்கும் வரும் 20ம் தேதி ஒரே சீனியாரிட்டி கணக்கிடப்படும் என்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நடராஜன் தெரிவித்தார்.

Add Comment