ம்மா..ம்மா வாம்மா…by அப்துல்லாஹ்

உறவறியா உயிர்த்துளியாய் உறைந்திருந்தேன் உன்னுள்
வீரியம் எதும்ன்றி வெற்றிடக் காற்றைப்போல
அங்கங்கள் முளைத்திடா அஃறிணை சதைப்பிண்டம்
என்புடன் சதையும் சேர்ந்து என்னை வடித்திட
உருக்கினாய் Buy cheap Lasix உன்னையே உடலம் எடுத்தேன் நான்
இருள் சூழ்ந்த கருக்குகையில் விழி என்பது ஒரு தழும்பு
உருண்டு புரண்டு முதுகு கொண்டு முட்டும்போது
அகல்விளக்கொளி போல ஆதுரமாய் உன் தடவல்
அம்மா ஆ… உள்ளங்கை ஸ்பரிசம்…
சிலிர்ப்பில் சிதறிய வண்ணங்கள் ம்மா..ம்மா..
மெல்லமாய் மவ்வொலித்தேன் நானறியாமலே
உயிர்க்குகையில் கழித்திட்ட மணித்துளிகள் ஒவ்வொன்றும்
உன்னதமானதம்மா உன்னருகில் உனக்குள்ளே….
அழையாமல் இன்று மண்ணறை நுழைந்து விட்டாய்
விழி உண்டெனக்கு இப்பொழுது அது அழுது வடித்த நீர்த்தழும்பாய்..

Add Comment