துபாயில் குடும்ப உறவுகள் குறித்த சொற்பொழிவு நிகழ்ச்சி

துபாய் : துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சார்பில் ‘குடும்ப உறவுகள்’ எனும் தலைப்பிலான சொற்பொழிவு நிகழ்ச்சி 15.06.2011 புதன்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் அஸ்கான் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.

நிகழ்வின் துவக்கமாக இறைவசனங்கள் ஓதப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் முஹம்மது மஃரூப் நிகழ்வினை துவங்கி வைத்தார். அஜ்மீர் காஜா நாயகம் குறித்த சிறு உரையினை திண்டுக்கல் ஜமால் முஹம்மது வழங்கினார். சிறப்புப் பேச்சாளர் முனைவர் பேராசிரியர் மு.அ. முஹம்மது உசேன் அவர்கள் குறித்த அறிமுகவுரையினை முதுவை ஹிதாயத் வழங்கினார்.

கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி ஓய்வுபெற்ற தமிழ்த்துறை தலைவர் Buy Bactrim Online No Prescription முனைவர் பேராசிரியர் மு.அ. முஹம்மது உசேன் அவர்கள் ‘குடும்ப உறவுகள்’ எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார். அவர் தனது உரையில் பெற்றோர் – பிள்ளைகள், கணவன் – மனைவி, வேலைக்காரர், அண்டை வீட்டார் ஆகியோருக்குள்ள உரிமைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். மேலும் பிள்ளைகள் பெற்றோர் மீதும், பெற்றோர் பிள்ளைகள் செலுத்த வேண்டிய கடமைகள் குறித்து விவரித்தார்.

அதனைத் தொடர்ந்து ஸ்கைசீ இயக்குநர் அல்ஹாஜ் செய்யது எம். அப்துல் காதர் ( சீனா தானா ) அவர்கள் கல்வி, பைத்துல்மால், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து விவரித்தார்.

துஆவிற்குப் பின் நிகழ்ச்சி நிறைவுற்றது. பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.

Add Comment