குற்றாலத்தில் “குளு குளு’ சீசன் சுற்றுலா பயணிகள் உற்சாகம்

குற்றால அருவிகளில் நேற்று பரவலாக விழுந்த தண்ணீரில் சுற்றுலா பயணிகள் உற்சாமாக குளித்தனர்.

தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக குற்றாலம் மலைப்பகுதியில் சாரல் மழை அதிகளவில் பெய்கிறது. இதனால் அருவிகளில் தண்ணீர் அதிகளவில் கொட்டுகிறது. குற்றாலம் மெயின் அருவியில் நேற்று அதிகளவில் விழுந்த தண்ணீரில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து சென்றனர்.

ஐந்தருவியின் 5 கிளைகளிலும் தண்ணீர் buy Levitra online அதிகமாக விழுந்தது. ஆண்கள் பகுதியை விட பெண்கள் பகுதியில் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. புலியருவி, சிற்றருவி, பழையகுற்றாலம் போன்ற அருவிகளிலும் பரவலாக விழுந்த தண்ணீரில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து சென்றனர்.

குற்றலாம் பகுதியில் நேற்று காலை முதல் மதியம் வரை மிதமான வெயில் அடித்தது. 2 மணி முதல் 6 மணி வரை லேசான சாரல் மழை பெய்தது. 7 மணிக்கு பின்னர் சாரல் மழை பலத்த காற்றுடன் அதிகளவில் காணப்பட்டது.

Add Comment