ஆன்மாவின் விபச்சாரம் (கவிக்கோ அப்துல் ரகுமான்)

ஆன்மாவின் விபச்சாரம்

(கவிக்கோ அப்துல் ரகுமான்)

உலகுக் கெல்லாம்
ஒருவனே தலைவன்
தலைவணக் கம்அந்தத்
தலைவனுக் கேயென
அறவுரை கூறிய
ஆன்றோர் களையே
அவதாரம் என்பதும்
அவரடி வீழ்வதும்
தலைவனை ஆகழும்
தற்குறித் தனமே

அரும்பிய துருவமீன்
அதனை நோக்கியே
திரும்ப வேண்டிய
திசைகாட் டியின்முள்
மின்மினிக் கெல்லாம்
மேனி திருப்பினால்
கப்பல் எப்படிக்
கரைபோய்ச் சேரும் ?

தலைவன் ஒருவனைத்
தலையால் வணங்குவதே
தலைகற் பாகும்
தலைவனை அன்றி
மற்ற Amoxil online வற்றை
மகேசன் என்றே
தொழுவது கொடிய
தொழுநோய் ஆகும்
மேலும் அது
ஆன்மா செய்யும்
விபச்சாரம் ஆகும்.

Add Comment