பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுகளில் மாநில சாதனை படைத்தமுஸ்லிம் மாணவ – மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு ஜூன் 18 – திருச்சி விழாவில் இ.யூ. முஸ்லிம் லீக் வழங்குகிறது

பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுகளில் மாநில சாதனை படைத்தமுஸ்லிம் மாணவ – மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு ஜூன் 18 – திருச்சி விழாவில் இ.யூ. முஸ்லிம் லீக் வழங்குகிறது

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஜூன் 5-ம் தேதி கண் ணியத்திற்குரிய காயிதெ மில்லத் பிறந்த நாளை கல்வி தினமாக அறிவித்து திறமை யான மாணவர்களை ஊக்கு விக்கவும் ஏழை மாணவர் களுக்கு உதவி செய்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளது.

மேல்நிலை உயர்நிலைப் பள்ளி இறுதித் தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறும் முஸ்லிம் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் (மொத்தம் 12 பேர்) ரொக்கப்பரிசுகள் வழங்கப்படுகின்றன.

அவர்கள் விவரம்:

பிளஸ் 2

ஆண்கள் (முதலிடம்) முஹம்மது ஆஸீம் அர்ஷத் – ரோஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மேலப்பாளையம், திருநெல்வேலி மாவட்டம். மதிப்பெண் – 1185

இரண்டாமிடம் முஹம்மது இர்ஷாத் – பொன்னேரி, மீஞ்சூர்- திருவள்ளூவர் மாவட்டம் மதிப்பெண் – 1180

மூன்றாமிடம் ஏ.எச். அமானுல்லாஹ் – எல்.கே. மேல்நிலைப்பள்ளி, காயல்பட்டினம், தூத்துக்குடி மாவட்டம் மதிப்பெண் -1177

பெண்கள் (முதலிடம்) அஸார் நிஷா பேகம் – எஸ்.கே.வி. மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, கண்டம் பாளையம், கல்லக்குடி, திருச்சி மாவட்டம் மதிப்பெண் – 1180

இரண்டாமிடம் ஹஸ்னா நாசர் – திருநெல்வேலி மதிப்பெண் – 1179

மூன்றாம் இடம் நஸீரா பானு – எஸ். ஆர்.கே. மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, கண்டம்பட்டி, ஓமலூர், சேலம் மதிப்பெண் – 1178

எஸ்.எஸ்.எல்.ஸி.

ஆண்கள் (முதலிடம்) சதாம் ஹுசைன் – முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி, மேலப்பாளையம், திருநெல் வேலி. மதிப்பெண் – 495/500

இரண்டாம் இடம் முஹம்மது அப்சல் – ஏ.சி.எஸ். மேல்நிலைப் பள்ளி, ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம் மதிப்பெண் – 488

மூன்றாம் இடம் எம்.எஸ். முஹம்மது அயாஸ் அலி – முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, அபிராமம், இராமநாதபுரம் மாவட்டம் மதிப்பெண் – 486

பெண்கள் முதலிடம் சபானா பேகம் – அன்னை தெரசா மேல்நிலைப்பள்ளி, ஈஸா பல்லாவரம், சென்னை மதிப்பெண் – 494

இரண்டாம் இடம் பர்வீன் – தூய நெஞ்சம் மேல்நிலைப்பள்ளி, ஆரணி, திருவண்ணாமலை மாவட் டம் மதிப்பெண் – 491

சமீரா பாத்திமா – ஜெய் கோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மீஞ்சூர், திருவள்ளூர் மாவட்டம். மதிப்பெண் – 491

மூன்றாம் இடம் எஸ்.எம். ஆயி ஷா சர்பியா – சுபைதா மேல்நிலைப்பள்ளி, காயல்பட்டினம், தூத்துக்குடி மாவட்டம் மதிப்பெண் – 490

இம்மாணவர்களுக்கு வரும் ஜூன் 18-ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு திருச்சி ஃபெமினா ஹோட் டல் காவேரி அரங்கில் நடை பெறும் விழாவில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் ரொக்கப்பரிசு களை வழங்க உள்ளார். காயிதெ மில்லத் விருது வழங்கும் விழா

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் வரும் 17, 18 வெள்ளி, சனி இரு தினங் கள் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள திருச்சி ஃபெமினா ஹோட் டல் காவேரி அரங்கில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமை யில் நடைபெறுகிறது.

17-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கும், 18-ம் தேதி காலை 10 மணிக்கும் நடக்கும் இக் கூட்டத்தை அனைத்து மாவட்டங்களின் நிர்வாகிகள் தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் buy Ampicillin online வழங்க உள்ளனர்.

இக் கூட்ட முடிவிற்கு பின் இதே இடத்தில் நடைபெறும் விழாவில் சிறந்த சேவை யாற்றும் முஸ்லிம் லீக் மூவருக்கான காயிதெ மில்லத் விருது வாணியம் பாடி அரூர் அப்துல் காலிக், திரு நெல்வேலி பேட்டை எஸ். கோதர் முகைதீன், லால் பேட்டை மவ்லானா தளபதி ஷபீகுர் ரஹ்மான் ஆகியோ ருக்கு வழங்கப்படுகிறது.

முஸ்லிம் லீக், முஸ்லிம் லீக் தலைவர்களை பற்றிய நூல் எழுதி வெளியிடும் ஆசிரியர் களுக்கு வழங்கப்படும் பரிசு இந்த ஆண்டு `காயிதெ மில்லத் பிள்ளைத் தமிழ்� நூல் எழுதிய அதிரை அருட்கவி முஹம்மது தாகாவிற்கு பொற்கிழியும், பாராட்டுப் பத்திரமும் இதே நிகழ்ச்சியில் வழங்கப்படுகிறது.

மாநில செயற்குழு கூட்டத் தையும், விழாக்களையும் மிக சிறப்பாக நடத்திக் கொடுக்க திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் முழு வீச்சில் பணி செய்து வருகின்றனர்.

Thanks

Mohamed Kasim
Dubai

Add Comment