ஜெயாவின் பிடிவாதம் முதல்வர் பதவிக்கு அழகல்ல: கருணாநிதி!

ஜெயலலிதாவின் பிடிவாதம் அவர் வகிக்கும் முதல்வர் பதவிக்கு அழகல்ல என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். புதிய சட்டமன்றக் கட்டடத்தை ஜெயலலிதா புறக்கணித்துள்ளது குறித்து கருணாநிதி கூறியுள்ளதாவது:

முதல்வராக 3வது முறை பதவியேற்றுள்ள ஜெயலலிதா தனனைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றியது அது திமுக ஆட்சியில் கட்டப்பட்டது என்ற ஒரே காரணத்தினால் தான் புதிய தலைமைச்செயலகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பணத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடத்தைப் புறக்கணிப்பது என்பது மக்களையே அவமதிப்பது Buy Bactrim போல் ஆகும். திமுக ஆட்சியில் கட்டப்பட்ட பல பாலங்களில் தான் முதல்வரின் கார் செல்கிறது. கோட்டையில் உள்ள நாமக்கல் கவிஞர் கட்டடம் கூட திமுக ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதுதான். ஜெயலலிதாவின் பிடிவாதம் அவரது பதவிக்கு அழகல்ல.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Add Comment