தவ்ஹீத்வாதிகள் ஓரணியில் இணைய வேண்டும்! -S.S.U.ஸைபுல்லாஹ் ஹாஜா!

கடந்த 17-06-2011 வெள்ளிக்கிழமை மாணவர்களுக்கான புத்தகம் வழங்கும் நிகழ்ச்சியில் இதஜவின் தென்காசி நகர் கிளை சார்பாக நடைபெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக மாநிலச் செயலாளர் செங்கிஸ்கான் கலந்து கொண்டார்.

அவர் அந்நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் சென்றார். அங்கு ஜுமுஆ தொழுது விட்டு, ததஜவின் முன்னாள் தலைவர் மவ்லவி S.S.U.ஸைபுல்லாஹ் Levitra online அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அவருடன் சகோதரர்கள் ஜபருல்லாஹ் ஆலிம், செய்குனா உள்ளிட்ட சகோதரர்களையும் சந்தித்தார். சகோதரர் செங்கிஸ்கானை ஸைபுல்லாஹ், ஜபருல்லாஹ் மற்றும் செய்குனா உள்ளிட்ட சகோதரர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்று பேசினர்.

அப்போது, அனைத்து ஏகத்துவாதிகளும் ஒரு அணியில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற தனது ஆசையினை ஸைபுல்லாஹ் தெரிவித்தார். அல்லாஹ் நல்லது நாடுவான் இன்ஷா அல்லாஹ் என தனது பதிலினை செங்கிஸ்கான் தெரிவித்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த தலைவர்களை சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சியாக இருந்தது என செங்கிஸ்கான் தெரிவித்தார்.

சகோதரர் ஸைபுல்லாஹ் ஹாஜா அவர்களின் நல்ல எண்ணத்தை நிறைவேற்றி அனைத்து தவ்ஹீத் சகோதரர்களும் ஓரணியில் இணைத்து மார்க்கம் மற்றும் சமுதாயப் பணியினை ஆற்ற அருள் செய்யட்டும் என துஆச் செய்கின்றோம்.

Add Comment