மனிதக் கழிவை மனிதனே அகற்றும் அவலம்:PM வேதனை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் அவலம் இன்னமும் நீடிப்பது வேதனையளிக்கிறது என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.

மேலும், அடுத்த 6 மாதங்களில் இந்த அவலநிலை ஒழிக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

மாநில சமூக நலத்துறை அமைச்சர்கள் கூட்டம் டெல்லியில் வெள்ளிக்கிழமை நடந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டு பேசுகையில், “பிற்பட்டோர், மலைவாழ் மக்கள் நலனில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும். இதற்காக பிற்பட்டோர் அதிகம் வாழும் கிராமங்களை தேர்ந்து எடுத்து, அந்த கிராமங்களை முன்னேற்றம் அடையச்செய்யும் திட்டத்தை, மத்திய அரசு தனது 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் நிறைவேற்ற இருக்கிறது.

இந்த முன்மாதிரி திட்டம் தமிழ்நாடு, அசாம், பீகார், இமாசல பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், 1,000 கிராமங்களில் நிறைவேற்றப்படும்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில், மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் அவலம் இன்னமும் நீடிப்பது வேதனையளிக்கிறது. இப் பணியில் தாழ்த்தப்பட்ட மக்களை ஈடுபடுத்துவோர் மீது மாநில அரசுகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடு முழுவதும் அடுத்த 6 மாதங்களில் இந்த அவல நடைமுறை முற்றிலும் ஒழிக்கப்படும். இது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் அனுப்பி இருக்கிறேன்.

இந்தியா சுதந்திரம் பெற்று 64 ஆண்டு ஆகிறது. இனி மேலும், மனிதனே மனித கழிவை சுமக்கும் நிலை இருக்க கூடாது. இதை தடுக்க, கிராமங்களில் நவீன கழிவறைகள் ஏற்படுத்த வேண்டும். நவீன கழிவறைகள் இல்லாத வீடே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். இதற்கு மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிராமங்களில் பிற்பட்டோர், மலைவாழ் மக்கள், இதர பிற்பட்டோர் இன மாணவர்கள் உயர் கல்வி படிக்க மத்திய அரசு வழங்கும் உதவிப்பணம் பெறுவதற்கான வருமான வரம்பு குறைக்கப்படும்.

மூத்த குடிமக்கள், வருமானம் குறைந்தோர் நலனையும் மாநில அரசுகள் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்களுடைய முன்னேற்றத்துக்கும் Buy cheap Ampicillin பாடுபட வேண்டும்,” என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.

Add Comment