சைபுல்லாஹ் காஜா அவர்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கம் .

எழுச்சியுடன் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் கிளைகளின் சார்பில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் 19/06/2011 அன்று கடையநல்லூர் மறவர் சமுதாய நலக்கூடத்தில் வைத்து நடைபெற்றது.இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தில் மாநில மேலாண்மை குழு தலைவர் சம்ஷுல் லுஹா அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் யூசுப் அலி, மாவட்ட செயலாளர் செய்யது அலி, அரசு நலத்திட்ட செயலாளர் குறிச்சி குளம் சுலைமான், துபை மண்டல தலைவர் முகம்மது நாசர், மாவட்ட துணைச்செயலாளர் அச்சன்புதூர் சுலைமான் மற்றும் நகர நிர்வாகிககள் முன்னிலை வகித்தனர்.

தொடக்க உரையாக மாநில அழைப்பாளர் அப்துந் நாசிர் அவர்கள் உரையாற்றினார். அதைத்தொடர்ந்து மாநில தணிக்கை குழு உறுப்பினர் அப்துல் ரஹ்மான் பிர்தவ்ஸி அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கொள்கைகள், செயல்பாடுகள், மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என்று விளக்கமாக பேசினார்.

இறுதியில் மாவட்ட தலைவர் அவர்கள் ஒரு தீர்மானத்தை வாசித்தார் அதில் மாநில தணிக்கை குழு உறுப்பினர் சைபுல்லாஹ் காஜா அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பெயரைச் சொல்லி கடையநல்லூர் மெயின் பஜாரில் உள்ள முபாரக் பள்ளி வாசலுக்கு அருகில் உள்ள இடம் வாங்க வேண்டும் என்று உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் சுமார் ரூ39,00,000 வரை பொதுமக்களிடம் நன்கொடையாக பணம் வசூல் செய்து பின்னர் அதைத் தனக்கு வேண்டிய ஒருவர் பெயரில் பத்திரம் பதிவு செய்து உள்ளார்.

இது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சட்ட விதிகளுக்கும் கொள்கை கோட்பாட்டிற்கும் விரோதமான செயலாகும். மேலும் மூன்று மாதம் அவகாசம் கொடுத்தும் இது வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ன் பெயரில் பள்ளிவாசல் இடத்தை முறையாக பத்திரப்பதிவு செய்யாத காரணத்திற்காக் அவரை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து, மாநில தலைமை உடனடியாக நீக்க வேண்டும் என்ற தீர்மானத்தை வாசித்தார். இதை பொதுக்குழுவில் கலந்து கொண்ட அனைவரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர்.

இதன் அடிப்படையில் மாநில மேலாண்மைக்குழு தலைவர் சமஷுல் லுஹா அவர்கள் S.S.U சைபுல்லாஹ் காஜா அவர்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கினார். மேலும் இவருக்கு துணையாக இருந்து செயல்பட்ட மாவட்ட துணைத்தலைவர் ஜபருல்லா, முன்னாள் நகர தலைவர் முகம்மது கோரி, முன்னாள் செயலாளர் முகம்மது காசிம், முன்னாள் பொருளாளர் பாவா, முன்னாள் துணைத்தலைவர் சேகனா, முன்னாள் துணைச்செயலாளர் யூசுப் பைஜி, ஆகியோரையும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்கள். இன்று முதல் இவர்களிடம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்கள் எந்த தொடர்பும் ஜமாஅத் சம்பந்தமாக வைக்கவேண்டாம் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

 

 

 

 

 

 

Buy Bactrim class=”alignleft size-full wp-image-7926″ title=”2″ src=”http://kadayanallur.org/wp-content/uploads/2011/06/2.jpg” alt=”” width=”558″ height=”371″ />

 

 

 

 

 

 

 

 

 

 

 

Add Comment