“சேம் சைடு கோல்”: டென்மார்க் தோல்வி* நெதர்லாந்து அபாரம்

நெதர்லாந்து அணிக்கு எதிரான உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில், டென்மார்க்கின் பவுல்சன் “சேம் சைடு’ கோலடித்தார். இதனை பயன்படுத்திக் கொண்ட நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் முதல் வெற்றி பெற்றது.

தென் ஆப்ரிக்காவில், 19வது “பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் ஜோகனஸ்பர்க் “சாக்கர் சிட்டி’ மைதானத்தில் நேற்று நடந்த “இ’ பிரிவு லீக் போட்டியில், உலக ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில் 4வது இடத்தில் உள்ள நெதர்லாந்து அணி, டென்மார்க் (“நம்பர்-36′) அணியை எதிர்கொண்டது.

வீணடித்த வாய்ப்பு: விறுவிறுப்பான ஆட்டத்தின் 6வது நிமிடத்தில் கிடைத்த “பிரி கிக்’ வாய்ப்பை நெதர்லாந்தின் வெஸ்லே ஸ்னெஜ்டர் வீணடித்தார். இதேபோல 7வது நிமிடத்தில் கிடைத்த “பிரி கிக்’ வாய்ப்பை, டென்மார்க்கின் எனிவோல்டுசன் வீணாக்கினார். தொடர்ந்து போராடிய இரு அணியினரும், தங்களுக்கு கிடைத்த “கார்னர் கிக்’ மற்றும் “பிரி கிக்’ வாய்ப்புகளை, கோலாக மாற்ற முடியாமல் திணறினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதி முடிவு 0-0 என பரிதாபமாக இருந்தது.

“சேம் சைடு’ கோல்: இரண்டாவது பாதியில் டென்மார்க் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆட்டத்தின் 46வது நிமிடத்தில் நெதர்லாந்தின் பெர்சி அடித்த பந்தை, டென்மார்க்கின் பவுல்சன் தலையால் முட்டி வெளியே தள்ள முயன்றார். ஆனால் அது, சக வீரர் ஆக்கெர் முதுகில் பட்டு, “சேம் சைடு’ கோலாக மாறியது. இதன்மூலம் நெதர்லாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றது.

நெதர்லாந்து ஆதிக்கம்: தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய நெதர்லாந்து அணியினரின் கோல் வேட்டையை, டென்மார்க் கோல்கீப்பர் சோரன்சன் அருமையாக தடுத்தார். இருப்பினும் ஆட்டத்தின் 85வது நிமிடத்தில் நெதர்லாந்தின் எலியா அடித்த பந்து, கோல் போஸ்டில் பட்டு திரும்பியது, இதனை சோரன்சன் கைப்பற்ற தவறியதால், நெதர்லாந்தின் குயிட் கோலாக மாற்றினார். கடைசி வரை போராடிய டென்மார்க் வீரர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்டநேர முடிவில் நெதர்லாந்து அணி 2-0 என்ற Ampicillin No Prescription கோல் கணக்கில் வெற்றி பெற்றது. நெதர்லாந்தின் வெஸ்லே ஸ்னெஜ்டர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Add Comment