காமரூனை வீழ்த்தியது ஜப்பான்

காமரூன் அணிக்கு எதிரான உலககோப்பை கால்பந்து லீக் போட்டியில், 1-0 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணி வெற்றி பெற்றது.

தென் ஆப்ரிக்காவில் 19 வது உலககோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. புளோயம்போன்டைனில் Levitra online நேற்று நடந்த லீக் சுற்றுப் போட்டியில், குரூப் “இ’ பிரிவில் இடம் பெற்ற ஜப்பான், காமரூன் அணிகள் மோதின.

ஹோண்டா அசத்தல்: விறுவிறுப்புடன் நடந்த இப்போட்டியின் ஆரம்பம் முதலே இரு அணிகளும் கோலடிக்க கடுமையாக போராடின. ஆட்டத்தின் 39 வது நிமிடத்தில், ஜப்பான் வீரர் மட்சுயி கொடுத்த “சூப்பர் பாசை’ பெற்றுக் கொண்ட கெய்சு ஹோண்டா கோலடித்து அசத்தினார்.

காமரூன் சொதப்பல்: இரண்டாவது பாதியில் காமரூன் அணியின் கோலடிக்கும் முயற்சிகள் எடுபடவில்லை. மூன்று முறை “கார்னர் கிக்’ (46, 62, 67 வது நிமிடங்கள்) வாய்ப்புகளை கோட்டை விட்டது. 86 வது நிமிடத்தில், காமரூன் வீரர் பியா “பீல்டு’ கோலடிக்க முயன்றார். ஆனால் பந்து “பாரில்’ பட்டுச் சென்றால், மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது. இறுதியில், ஜப்பான் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது. அதிகம் எதிர்பர்க்கப்பட்ட காமரூன் கேப்டன் சாமுவேல் இடோ, பெரும் ஏமாற்றம் அளித்தார்.

Add Comment