என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டு இடங்களுக்கு கவுன்சிலிங்

வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் (என்.ஆர்.ஐ.,) ஒதுக்கீட்டுக்கான பொறியியல் கல்வி கவுன்சிலிங், அண்ணா பல்கலை கலையரங்கில் நேற்று நடந்தது.

இது குறித்து, அண்ணா பல்கலை வெளிநாட்டு விவகாரங்கள் பிரிவு இயக்குனர் பாஸ்கரன் கூறியதாவது: சென்னை அண்ணா பல்கலை, அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி, கிண்டி பொறியியல் கல்லூரி மற்றும் எம்.ஐ.டி., ஆகியவற்றில், பொறியியல் கல்வி பயில, வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் ஒதுக்கீட்டுக்கு 15 சதவீதம் இடஒதுக்கீடு உள்ளது. இதில், வளைகுடா நாடுகளை சேர்ந்த இந்தியர்களுக்கு 5 சதவீதமும், மற்ற நாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு 10 சதவீதமும், இட ஒதுக்கீடு உள்ளது. மொத்தம் உள்ள 345 இடங்களுக்கான, இந்தாண்டு கவுன்சிலிங், இன்று (நேற்று) நடைபெறுகிறது. இப்பிரிவில் விண்ணப்பித்த 310 பேருக்கு ஒரே நாளில் கவுன்சிலிங் நடக்கிறது. மின்னணு தகவல் தொழில்நுட்பம், மெக்கானிக்கல், Viagra online கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு மாணவர்கள் முன்னுரிமை அளிக்கின்றனர்.

கடந்தாண்டு, இப்பிரிவில் 148 இடங்கள் நிரம்பின. இந்தாண்டு 250 பேர் சேர்வார்கள் என எதிர்பார்க்கிறோம். விண்ணப்பதாரர்களின் தாய், தந்தையில் ஒருவர், வெளிநாட்டு வாழ் இந்தியராக இருந்து, அவர்களின் பிள்ளைகள் இந்தியாவில் பயின்றாலும், அவர்களுக்கு இப்பிரிவின் கீழ், அண்ணா பல்கலையில் பயில வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு பாஸ்கரன் கூறினார்.

Add Comment