வெற்றியுடன் துவக்குமா பிரேசில் *இன்று வட கொரியாவுடன் மோதல்

உலக கோப்பை கால்பந்தில் இன்றைய லீக் போட்டியில், உலகின் “நம்பர்-1′ அணியான பிரேசில், வட கொரியாவை சந்திக்கிறது. இதில், பிரேசில் அசத்தலான வெற்றியைப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென் ஆப்ரிக்காவில் 19வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஜோகனஸ்பர்க், எல்லீஸ் பார்க் மைதானத்தில் இன்று இரவு நடக்கும் “ஜி’ பிரிவு போட்டியில், வலிமையான பிரேசில் அணி, தரவரிசையில் 105 வது இடத்திலுள்ள, பலவீனமான வட கொரியா அணியை சந்திக்கிறது.

உலக கோப்பை வரலாற்றில் ஐந்து முறை கோப்பை வென்று சாதித்துள்ள அணி பிரேசில். கடந்த தொடரில் ஐந்தாவது இடம் பெற்ற இந்த அணி, ஆறாவது முறையாக கோப்பை வெல்ல, ஆப்ரிக்க மண்ணில் களமிறங்கியுள்ளது. இதற்கேற்ப, பயிற்சி ஆட்டங்களில் ஜிம்பாப்வே (3-0), தான்சானியா (5-1) அணிகளை அதிக கோல் வித்தியாசத்தில் வென்ற உற்சாகத்தில் இன்று களமிறங்குகிறது.

காகா பலம்: சீனியர் வீரர் கார்லஸ் துங்காவின் பயிற்சியில் ஏற்கனவே கோபா அமெரிக்கா, கான்பெடரேஷன் கோப்பை வென்றுள்ளது. ரோனால்டோ, ரொனால்டினோ, ரிவால்டோ என மூன்று “ஆர்’ இல்லாத நிலையில் அணி காகா, லூயிஸ் பேபியானோ, ராபின்ஹோ மற்றும் மைகான் போன்ற முன்னணி வீரர்கள் கைகொடுக்கத் தயாராக உள்ளனர். இவர்களுடன் “சூப்பர்’ கோல் கீப்பர் ஜூலியோ சீசர் எவ்வித தாக்குதலையும் தடுப்பதில் வல்லவர்.
இவர்களது அபார ஆட்டத்தில் பிரேசில் அணி எளிதாக வெற்றி பெறும் என்பது உறுதி.
சமாளிப்பார்களா?

வட கொரிய அணியை பொறுத்தவரையில், இரண்டாவது முறையாக உலக கோப்பை தொடரில் பங்கேற்கிறது. Bactrim No Prescription முதன் முறையாக கடந்த 1966ல் பங்கேற்ற போது, எதிரணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்து காலிறுதி வரை முன்னேறியுள்ளது. அடுத்து 44 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஆச்சர்யம் கொடுக்க முயற்சிக்கலாம். ஆனால் நைஜீரியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் தோல்வியடைந்து ஏமாற்றத்தில் <உள்ளது.
இருப்பினும் இந்த அணிக்கு அன் கோல் ஹியாக், கேப்டன் ஹாங் யாங்-ஜோ, ஜோயி ஹும் ஆகிய முன்கள ஆட்டக்காரர்கள் அணியை காப்பாற்றுவார்கள் என நம்பப்படுகிறது.

Add Comment