ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கூட்டம் – கருணாநிதி பங்கேற்பாரா?

லோக்பால் மசோதா குறித்து விவாதிப்பதற்க்காக ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் இன்று மாலை 7 மணி அளவில் பிரதமர் இல்லத்தில் வைத்து நடைபெற உள்ளது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ், திரினாமுல் காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. ஜாமீன் மறுக்கப் பட்ட தன் மகள் கனிமொழியைக் காண டெல்லி சென்றுள்ள திமுக தலைவர் கருணாநிதி Buy Lasix Online No Prescription ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்பாரா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
2G ஊழல் வழக்கில் சி பி ஐ யின் அதிரடி நடவடிக்கைகளால் மகள் கனிமொழி கைது செய்யப் பட்டு திகார் சிறையில் உள்ள நிலையில் திமுக தலைவர் கருணாநிதி இந்த கூட்டத்தில் பங்கேற்பது சந்தேகமே. எனினும் திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு கலந்து கொள்வார் எனத் தெரிகிறது.

Add Comment