சீனியர் வீரர்கள் கைகொடுப்பார்கள் * கேப்டன் தோனி நம்பிக்கை

“ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், அணியின் வெற்றிக்கு சீனியர் வீரர்கள் கைகொடுப்பார்கள்,” என இந்திய கேப்டன் தோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இலங்கையில், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று துவங்குகிறது. இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நான்கு அணிகள் பங்கேற்கின்றன.

இத்தொடர் குறித்து கேப்டன் தோனி கூறியதாவது: ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில், சீனியர் வீரர்கள் மீண்டும் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நல்ல உடல் தகுதியுடன் buy Amoxil online உள்ள இவர்கள், அணியின் வெற்றிக்கு நிச்சயம் கைகொடுப்பார்கள் என நம்புகிறேன்.

ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்த போதும், இளம் வீரர்கள் நிறைய பாடம் கற்றுக்கொண்டனர். இத்தொடர் மூலம் உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு உள்ள வேறுபாட்டை நன்கு அறிந்திருப்பார்கள். இந்த அனுபவம், வரும் காலங்களில் சர்வதேச அரங்கில் சாதிக்க உதவும்.
இத்தொடரில் எந்த அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. ஒவ்வொரு போட்டியிலும் முழுதிறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற போராடுவோம்.
இவ்வாறு தோனி கூறினார்.

Add Comment