நாட்டின் நிதியை மோசடி செய்தார் என்பதற்காக மட்டும் 35 வருடச் சிறைத் தண்டனைக்கு உள்ளான ஜனாதிபதி குடும்பம்

டியுனிசியாவின் முன்னாள் ஜனாதிபதி ஷைன் எல் அபிடைன் பென் அலி மற்றும் அவரது மனைவி லெய்லா ஆகியோருக்கு, 35 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் நிதியை துஷ்பிரயோகம் செய்தாக அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன.அத்துடன் அவர்களுக்கு 66 மில்லியன் டொலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு சொந்தமான பகுதி ஒன்றில் இருந்து 27 மில்லியன் டொலர்கள் பெறுமதியான பணம் மற்றும் நகைகள் மீட்கப்பட்டன.இதனை Buy Bactrim Online No Prescription தொடர்ந்து அந்த குற்றம் உறுதி செய்யப்பட்டது.

எனினும், ஆயுதக்கடத்தல் மற்றும் போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பிலான பென் அலியின் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, இது அரசியல் ரீதியாக சோடிக்கப்பட்டதாகவும், நகைப்புக்குறியது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Add Comment