ஆசிய கோப்பை இன்று ஆரம்பம் – முதல் சவாலில் இலங்கை-பாக்.,

தம்புலா: இலங்கையில், இன்று துவங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், 15 ஆண்டுகளுக்கு பின் கோப்பை வென்று சாதிக்க இந்திய அணி களமிறங்குகிறது. இன்றைய முதல் போட்டியில் “நடப்பு சாம்பியன்’ இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இலங்கையில், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று முதல் வரும் 24ம் தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நான்கு அணிகள் பங்கேற்கின்றன.

15 ஆண்டுக்கு பின்: ஆசிய கோப்பை தொடரில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி, கடைசியாக கடந்த 1995ல் சார்ஜாவில் நடந்த தொடரில் கோப்பை வென்றது. இம்முறை கோப்பை வெல்லும் பட்சத்தில், சுமார் 15 ஆண்டுக்கு பின் ஆசிய கோப்பை வென்று அசத்தலாம்.

மீண்டும் “நம்பர்-2′: சமீபத்தில் ஜிம்பாப்வேயில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது. இதனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது. ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சாதிக்கும் பட்சத்தில், மீண்டும் “நம்பர்-2′ இடத்தை பெறலாம்.

சச்சின் இல்லை: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், சொந்த வேலை காரணமாக “மாஸ்டர் பேட்ஸ்மேன்’ சச்சின் பங்கேற்கவில்லை. இதேபோல மோசமான “பார்ம்’ காரணமாக யுவராஜ் சிங், யூசுப் பதான் நீக்கப்பட்டனர். ஜிம்பாப்வே தொடரின்போது ஓய்வு அளிக்கப்பட்டிருந்த கேப்டன் தோனி, சேவக், காம்பிர், ஜாகிர், ஹர்பஜன், நெஹ்ரா, பிரவீண் குமார் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் மீண்டும் அணிக்கு திரும்புகின்றனர். ஐ.பி.எல்., Buy cheap Doxycycline தொடரில் அசத்திய சவுரப் திவாரி புதுமுக வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜிம்பாப்வே தொடரில் அசத்திய சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா, விராத் கோஹ்லி, ரவிந்திர ஜடேஜா, அஸ்வின், அசோக் டிண்டா, பிரக்யான் ஓஜா ஆகியோருக்கு, இத்தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேச அணியை நாளை எதிர்கொள்கிறது.

தில்ஷன் நம்பிக்கை: இன்று தம்புலாவில் நடக்கும் முதல் போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஜிம்பாப்வே தொடரின் போது ஓய்வு அளிக்கப்பட்டிருந்த இலங்கை கேப்டன் சங்ககரா, ஜெயவர்தனா, முரளிதரன், லசித் மலிங்கா உள்ளிட்ட அனுப வீரர்கள் அணிக்கு திரும்புவது பலம். மோசமான “பார்ம்’ காரணமாக ஜெயசூர்யா இடம் பெறவில்லை. இதேபோல “சுழல் மன்னன்’ அஜந்தா மெண்டிஸ், இத்தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை. இருப்பினும் ஜிம்பாப்வே தொடரில் கோப்பை வென்று சாதித்த தில்ஷன், மாத்யூஸ், குலசேகரா, <உபுல் தரங்கா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளது, இலங்கை அணியின் நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது.

மாலிக் வருகை: பாகிஸ்தான் அணியில் சோயப் அக்தர், சோயப் மாலிக் நீண்ட நாட்களுக்கு பின் மீண்டும் இடம் பிடித்துள்ளனர். கேப்டன் அப்ரிதி, சல்மான் பட், “ஆல்-ரவுண்டர்’ அப்துல் ரசாக், கம்ரான், உமர் அக்மல் உள்ளிட்டோர் கைகொடுக்கும் பட்சத்தில், பாகிஸ்தான் அணி எளிதில் வெற்றி பெறும். வேகத்தில் முகமது ஆசிப், முகமது ஆமெர் சாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நான்கு முறை
ஆசிய கோப்பை கிரிக்கெட் அரங்கில் அதிக முறை கோப்பை வென்ற அணிகள் வரிசையில், இந்தியா (1984, 88, 90-91, 95) மற்றும் இலங்கை (1986, 97, 2004, 08) அணிகள் உள்ளன. இவ்விரு அணிகள் தலா நான்கு முறை கோப்பை வென்றுள்ளன. பாகிஸ்தான் அணி ஒரு முறை (2000) கோப்பை வென்றுள்ளது.

இந்தியா “374′
ஆசிய கோப்பை கிரிக்கெட் அரங்கில், ஒரு போட்டியில் அதிக ரன் குவித்த அணிகள் வரிசையில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. கடந்த 2008ல் கராச்சியில் நடந்த போட்டியில், ஹாங்காங் அணிக்கு எதிராக இந்திய அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 374 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து இலங்கை (357/9, எதிர்-வங்கதேசம், 2008, லாகூர்), பாகிஸ்தான் (343/5, எதிர்-ஹாங்காங், 2004, கொழும்பு) அணிகள் உள்ளன.

ஜெயசூர்யா அபாரம்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், அதிக ரன் சேர்த்த வீரர்கள் வரிசையில் இலங்கையின் ஜெயசூர்யா முன்னிலை வகிக்கிறார். இத்தொடரில் 25 போட்டியில் விளையாடிய இவர், 6 சதம், 3 அரைசதம் உட்பட 1220 ரன்கள் சேர்த்துள்ளார். இவரை தொடர்ந்து இந்தியாவின் சச்சின் (20 போட்டி, 799 ரன்), இலங்கையின் ரணதுங்கா (19 போட்டி, 741 ரன்) உள்ளனர்.
இம்முறை இடம் பெற்றுள்ள வீரர்களில், அதிக ரன் சேர்த்தவர்கள் வரிசையில் பாகிஸ்தானின் சோயப் மாலிக் (10 போட்டி, 528 ரன்), இலங்கையின் சங்ககரா (12 போட்டி, 501 ரன்), இந்தியாவின் சேவக் (11 போட்டி, 488 ரன்) உள்ளனர்.

முரளிதரன் துல்லியம்
ஆசிய கோப்பை அரங்கில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில், இலங்கையின் முரளிதரன் முன்னிலை வகிக்கிறார். இவர் 21 போட்டியில் விளையாடி, 27 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இவரை தொடர்ந்து இலங்கையின் வாஸ் (23 விக்.,), ஜெயசூர்யா (22 விக்.,), அஜந்தா மெண்டிஸ் (17 விக்.,) ஆகியோர் உள்ளனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக சச்சின், இர்பான் பதான் தலா 17 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.

Add Comment