தனியார் பள்ளிகளின் கல்விக்கட்டணம் மறு பரிசீலனை : கோரிக்கையை ஏற்றது சீரமைப்புக்குழு

தனியார் பள்ளிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற பள்ளிகளின் கோரிக்கையை, கட்டண சீரமைப்புக் குழு ஏற்றுக்கொண்டுள்ளது. இதையடுத்து, மேல் முறையீடு செய்த பள்ளிகளுக்கு விரைவில் புதிய கட்டணத்தை அறிவிக்க, கோவிந்தராஜன் குழு முடிவுஎடுத்துள்ளது.

தனியார் பள்ளிகளின் கட்டணத்தை ஒழுங்குமுறைப்படுத்தி, புதிய கட்டணம் நிர்ணயிப்பதற்காக, நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு, மாநிலம் முழுவதும் உள்ள 10 ஆயிரத்து 250 பள்ளிகளிடம் இருந்து கட்டண விவரங்களை பெற்று, அதனடிப்படையில் கடந்த மாதம் முதல் வாரத்தில் புதிய கட்டணத்தை வெளியிட்டது. குழு அறிவித்த கட்டணம் மிகவும் குறைவு என்றும், இந்தக் கட்டணத்தை வைத்துக் கொண்டு பள்ளியை நடத்த முடியாது என்றும் பள்ளிகள் போர்க்கொடி தூக்கின. பல்வேறு சங்கங்களும், குழுவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, கட்டணத்தை உயர்த்த கோருபவர்கள் மேல் முறையீடு செய்யலாம் என குழு அறிவித்தது. அதன்படி, கட்டணத்தை உயர்த்தக் கோரி, 8,000 பள்ளிகள், கோவிந்தராஜன் குழுவிடம் மேல் முறையீடு செய்தன. இந்த மேல் முறையீட்டு மனுக்கள் மீது, இரண்டு வாரங்களாக தீவிர ஆய்வு நடந்து வருகிறது. இந்தப் பணியில் 30க்கும் மேற்பட்ட அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பள்ளிகளின் கோரிக்கையை ஏற்று, பள்ளிகளின் பல்வேறு செலவுகள் குறித்து, பள்ளிகள் கொடுத்த ரசீதுகளும், பள்ளிகளின் கோரிக்கைகளும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில், கோவிந்தராஜன் குழு, கல்விக் கட்டணத்தை மறு பரிசீலனை செய்து வருகிறது. ஆய்வுப் பணிகள் ஓரிரு நாளில் முடிந்ததும், 8,000 பள்ளிகளுக்கும் திருத்தப்பட்ட புதிய கட்டணம் அறிவிக்கப்பட உள்ளது. புதிய கட்டணம், ஏற்கும் படி இருக்கும் என, பள்ளிகள் நம்பிக்கையுடன் உள்ளன. புதிய கட்டணம் அறிவித்தபின், அனைத்துப் பள்ளிகளுக்கும் தனித்தனியாக நிர்ணயிக்கப்பட்ட கட்டண விவரங்களை, பள்ளிக்கல்வி இணையதளத்தில் வெளியிடவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். புதிய கட்டணம் எவ்வளவு என்பது தெரியாததால், தற்போது, பெற்றோரிடையே குழப்பம் நிலவி வருகிறது. இணையதளத்தில் கட்டண விவரம் வெளியிட்டதும், Doxycycline online இது குறித்து பெற்றோரின் குழப்பத்திற்கு தீர்வு கிடைக்கும்.

Add Comment