கடையநல்லூர் நகராட்சியின் அலட்சியம்

கவனக்குறைவற்ற கடையநல்லூர் நகராட்சியே ……………..?

கடையநல்லூர் நகராட்சி எல்கைகுட்பட்ட 13 வது வார்டு (அல்லிமூப்பன் மற்றும் அதனை சுற்றுள்ள பகுதிகள்) மிகவும் பெரிய பகுதியாகும் .இங்கு உள்ள பொதுமக்கள் அனைவரும் நீண்ட நாட்களாக குடிதண்ணீர் சரியாக கிடைக்கப்பெறாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள் . இந்த பிரச்சினையை கடையநல்லூர் நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை கொண்டுசென்றும் முறையான தீர்வு இதுவரை கிடைக்கபெறவில்லை.கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இப்பகுதிக்கு முறையான குடிநீர் கிடைப்பதற்காக புதிய குடிநீர் குழாய் அமைக்க மூன்று லட்சம் ரூபாய் ஒதிக்கீடு செய்யப்பட்டதாக அறிகிறோம் .ஆனால் இதுவரை அதற்கான டெண்டர் விடப்பட்டதாக தெரியவில்லை .அப்படி டெண்டர் விடப்பட்டிருந்தால் அதற்கான பணிகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை .கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த பிரச்சினைக்காக கடையநல்லூர் நகராட்சியை 13 வது வார்டு (அல்லிமூப்பன் மற்றும் அதனை சுற்றுள்ள பகுதிகள்) பொதுமக்கள் அணுகியபோது நிர்வாகத்திடமிருந்து முறையான பதில் எதுவும் கிடைக்கவில்லை,குடிநீர் பிரச்சனையும் தீரவில்லை.இவ்வாறு எங்களுடைய பகுதியை தொடர்ந்து புறக்கணிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.

கடையநல்லூர் நகராட்சி ஆணையர் திரு ,அப்துல் லத்தீப் அவர்கள் இந்த பிரச்சினையில் முறையான பதிலோ ,பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்காததை வன்மையாக கண்டிக்கிறோம் .மேலும் இந்த பிரச்சினையில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு ,செந்தூர் பாண்டியன் அவர்கள் உடனே தலையிட்டு எங்களுடைய 13 வது வார்டு மக்களின் நீண்ட நாள் குடிதண்ணீர் பிரச்சினை தீர நடவடிக்கைஎடுக்கவேண்டும்.

அல்லிமூப்பன் buy Levitra online தெரு பகுதியில் இன்னும் சாலைகள் முறையாக சீரமைக்கபடவில்லை.இதை நமது தொகுதி MLA . திரு ,செந்தூர் பாண்டியன் அவர்கள் இதற்கு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆணையாளர் மற்றும் சில அதிகாரிகள் இங்கு லஞ்சம் வாங்கிக்கொண்டு காரியம் செய்து கொடுப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது .இதை லஞ்ச ஒழிப்பு துறை கவனத்தில் கொள்ளவும்.

இப்பிரச்சனை தொடர்ந்தால் 13 வது வார்டு ஆண்கள் ,பெண்கள் அனைவரும் சேர்ந்து கடையநல்லூர் நகராட்சி முன்பாக எங்கள் பகுதி குடிதண்ணீர் பிரச்சனைக்காக சாலை மறியல் செய்ய தயங்கமாட்டோம் .

13 வது வார்டு பொதுமக்கள்

Add Comment