முதல் டெஸ்ட் – இந்தியா அபார வெற்றி

இந்தியா மற்றும் மேற்கு இந்தியத்தீவு அணிகளுக்கிடையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.இந்திய அணி தற்போது மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. 20 ஓவர்கள் மற்றும் ஒரு நாள் தொடர் போட்டிகளை இந்திய அணி கைப்பற்றியது.

இரண்டு அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டன் பார்க் மைதானத்தில் கடந்த 20 ஆம் திகதி ஆரம்பித்தது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 246 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ராய்னா 82 ரன்கள் குவித்தார். ஹர்பஜன் சிங் 70 ரன்களும் டிராவிட் 40 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். மே.இ.அணி சார்பில் எட்வர்ட்ஸ் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய மே.இ.தீவு அணி இந்திய பந்து வீச்சை சந்திக்கத் திணறியது. அந்த அணி 173 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தொடக்க ஆட்டக்காரர் பரத் சிறப்பாக ஆடி 64 ரன்கள் எடுத்தார். இந்திய அணிக்காக பிரவிண் குமார் மற்றும் இஷாந்த் சர்மா தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

73 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மீண்டும் சோபிக்கத் தவறினர் – டிராவிட்டைத் தவிர. அணியின் சுவர் என அழைக்கப்படும் டிராவிட் தனது அற்புதமான ஆட்டத்தினால் இந்திய அணி கௌரவமான ஸ்கோர் எடுக்க உதவினார். டிராவிட் மிக நிதானமாக விளையாடி சதம் எடுத்தார். இந்தப் போட்டி டிராவிட்டின் 150 வது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

டிராவிட்டைத் தவிர வேறு யாரும் 30 ரன்களைத் தாண்டவில்லை. டிராவிட் 112 ரன்கள் எடுத்தார். மே.இ.தீவு சார்பில் சமி மற்றும் பிஷூ தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர். பின்னர் வெற்றி இலக்காக 326 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் மே.இ.அணி ஆடத் தொடங்கியது. ஆட்டக்களம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் இந்த எண்ணிக்கையை எட்டுவது மிகவும் கடினமாக இருந்தபோதிலும் மே.இ.தீவு அணி வீரர்கள் வெற்றிக்காக போராடினர். ஒரு கட்டத்தில் 148 ரன்களுக்கு 3 விக்கெட்களை Buy Levitra Online No Prescription எடுத்திருந்த அந்த அணியினர் மேலும் 50 ரன்களை எடுக்கும் முன்னர் 5 விக்கெட்களை இழந்தனர். கடைசி இரண்டு விக்கெட்களுக்கு 74 ரன்களை எடுத்த மே.இ.தீவு இறுதியாக 262 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இதனால் இந்திய அணி 63 ரன்களினால் வெற்றி பெற்றது.

இந்தியத் தரப்பில் அற்புதமாக பந்து வீசிய பிரவிண் குமார் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக டிராவிட் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இரண்டாவது டெஸ்ட் பிரிட்ஜ்டவுனில் வரும் 28 ஆம்திகதி தொடங்குகிறது

Add Comment