கடையநல்லூர் TNTJ சார்பில் மாணவ மாணவியருக்கு நோட்டு புத்தகம் வழங்கல்

கடையநல்லூர் தமிழ்நாடு தல்ஹீத் ஜமாஅத் டவுண் கிளை சார்பாக பள்ளி மாணவ மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி 22.06.2011 இரவு 7 மணி அளவில் அட்டக்குளம் சின்னத் தெருவில் தவ்ஹீத் ஜமாத் மர்கஸில் வைத்து நகர தலைவர் அய்யுப் கான் தலைமையில் நடைபெற்றது..

நகர Buy cheap Cialis செயலாளர் காஜா மைதீன்,பொருளாளர் அகமது அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அரசு நல திட்ட மாவட்ட செயலாளர் குறிச்சி சுலைமான் அவர்கள் கல்வியின் அவசியத்தை பற்றிய உரை நிகழ்த்திமாணவ மாணவியருக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினார்

இந்நிகழ்ச்சியில் உலகா, தாருஸ்ஸலாம் , ஹிதாயத்துல் இஸ்லாம் ,மசூதுதைக்கா மேல்நிலைப்பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் அந்தந்த பள்ளியின் தலைமையாசிரியர்களால் தேர்வு செய்யப்பட்ட ஏழை மாணவ மாணவியருக்கு வழங்கப்பட்டது..புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே..!

Add Comment