இத்தாலி-பராகுவே போட்டி “டிரா’

இத்தாலி, பராகுவே அணிகள் மோதிய உலககோப்பை லீக் போட்டி “டிராவில்’ முடிந்தது.
தென் ஆப்ரிக்காவில் நடக்கும் உலககோப்பை கால்பந்து தொடரின், நேற்றைய லீக் போட்டியில், குரூப் “எப்’ பிரிவை சேர்ந்த இத்தாலி, பராகுவே அணிகள் மோதின.

பராகுவே அசத்தல்: பரபரப்பாக நடந்த இப்போட்டியின் 3 வது நிமிடத்தில் இத்தாலி அணிக்கு “கார்னர் கிக்’ வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இதனை கோட்டை விட்டது இத்தாலி. பராகுவே அணி வீரர்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இத்தாலி வீரர்கள் அடிக்கடி தவறுகள் செய்ய, அது பராகுவே அணிக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது. ஆட்டத்தின் 39 வது நிமிடத்தில் பராகுவே அணிக்கு “பிரீ-கிக்’ வாய்ப்பு கிடைத்தது. டாரஸ் அடித்த பந்தை, லாவகமாக தலையில் முட்டி சூப்பர் கோலடித்தார் பராகுவே வீரர் அன்டோலின் அல்காரஸ்.

இத்தாலி பதிலடி: இதற்கு இரண்டாவது பாதியில் இத்தாலி பதிலடி கொடுத்தது. 63 வது நிமிடத்தில் கிடைத்த “கார்னர் கிக்’ வாய்ப்பில், இத்தாலி வீரர் டி ரோசி கோலடித்து அசத்தினார். அதற்குப் பின் பராகுவே அணி தடுப்பாட்டம் ஆட, Buy Ampicillin Online No Prescription இத்தாலி அணியால் சாதிக்க முடியவில்லை. இறுதியில் 1-1 என்ற கோல் கணக்கில் இப்போட்டி “டிராவில்’ முடிந்தது.

Add Comment