மகனுக்கு கொலை மிரட்டல்: அவசரமாக மதுரை திரும்பிய அழகிரி

தனது மகன் துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல்கள் வந்ததையடுத்து மத்திய ரசாயனத்துறை அமைச்சர் மு.க.அழகிரி அவசரமாக டெல்லியிலிருந்து மதுரை திரும்பினார்.

Buy Amoxil Online No Prescription style=”text-align: justify;”>சென்னைக்கு வந்தால் தலை இருக்காது என்று துரை தயாநிதிக்கு மிரட்டல் போன் கால்கள் வந்ததாக நக்கீரன் செய்தி வெளியிட்டிருந்தது. தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தொடர்ந்து டெல்லியிலேயே முகாமிட்டிருந்த அழகிரி, இந்த மிரட்டல்களையடுத்து நேற்று மாலை அவசரமாக மதுரை திரும்பினார்.

இந்த மிரட்டல்கள் பழைய நண்பர்கள் வட்டாரத்தில் இருந்துதான் வந்துள்ளதாக அழகிரியிடம் தயாநிதி கூறியுள்ளதாகத் தெரிகிறது.

இதையடுத்து துரை தயாநிதியை டெல்லிக்கு அழைத்துச் செல்லவும் அழகிரி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

Add Comment