டீசல், கியாஸ் விலை இன்று முடிவாகவில்லை

டீசல், கியாஸ் விலையை உடனே உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு எண்ணை நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன. தங்கள் கோரிக்கை குறித்து முடிவு எடுக்காவிட்டால், டீசல், சமையல் கியாஸ் சப்ளையை நிறுத்தப் போவதாகவும் எண்னை நிறுவனங்கள் மிரட்டல் விடுத்தன.

கடந்த ஓராண்டாக டீசல், கியாஸ் விலை உயர்த்தப்படவில்லை. எனவே எண்ணை நிறுவனங்கள் கோரிக்கையை மத்திய அரசு நேற்று ஏற்றுக் கொண்டது. அதன்படி டீசல் விலை லிட்டருக்கு ரூ. 6, சமையல் கியாஸ் விலை சிலிண்டருக்கு ரூ. 50 உயரும் என்று கூறப்பட்டது.

இதை முடிவு செய்ய டெல்லியில் இன்று (வெள்ளி) மத்திய நிதி மந்திரி பிரணாப்முகர்ஜி Buy Bactrim Online No Prescription தலைமையில் மந்திரிகள் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த கூட்ட முடிவில் டீசல், கியாஸ் விலை உயர்வு உடனே அறிவிக்கப்பட்டு, அமலுக்கு வந்து விடும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்று மதியம் மந்திரிகள் குழு கூட்டம் திடீரென ஒத்திவைத்து அறிவிக்கப்பட்டது. சில மந்திரிகள் டெல்லிக்கு வந்து சேராததால் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனால் டீசல், கியாஸ் விலை உயர்வு சற்று ஒத்திப் போடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் (ஜூலை) முதல் வாரத்தில் மந்திரிகள் கூடி டீசல், கியாஸ் விலை உயர்வை முடிவு செய்வார்கள் என்று தெரிகிறது.

Add Comment