விழுப்புரத்தில் நள்ளிரவில் நில நடுக்கம்: மக்கள் பீதி

விழுப்புரம்: விழுப்புரத்தில் நேற்று நள்ளிரவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மக்கள் பயத்தில் Amoxil No Prescription எழுந்து வெளியே ஓடினர்.

3 நாட்களுக்கு முன் சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் அதிகாலையில் நில அதிர்ச்சி ஏற்பட்டது. இதை ராசிபுரம், நாமக்கல், திருச்செங்கோடு மற்றும் ஈரோடு வரை உணர முடிந்தது.

இந் நிலையில் விழுப்புரத்தில் நேற்றிரவு நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் விராட்டிக் குப்பம் பகுதியில் நள்ளிரவு 11.15 மணியளவில் திடீரென டி.விக்களில் சிக்னல் சரியாகக் கிடைக்கவில்லை.

இதையடுத்த சில நொடிகளி்ல் நில நடுக்கம் ஏற்பட்டது. வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு தெருவுக்கு ஓடி வந்தனர். இதில் 6 வீடுகளில் தரையிலும் சுவர்களிலும் லேசான விரிசலும் ஏற்பட்டுள்ளது.

Add Comment