போர் வியூகத்தை மாற்றினார் கடாபி..

லிபிய ; கடாபியுடனான போர் பெரும் தாமதங்களை சந்தித்துள்ளது. நேட்டோ படைகள் எடுத்த முயற்சியும் போதிய பயனளிக்கவில்லை. கடாபியின் படைகள் சிறப்பாக போரிட்டு வருகின்றன. அவரை முறியடிக்க முடியாதபடி ஒரு மாயக்கரம் பின்னால் இருக்கிறதோ என்று சந்தேகப்படும்படி காரியங்கள் நடக்கின்றன. நேட்டோ படைகள் இலகுவாகக் குண்டு வீச முடியாதபடி தற்போது ஆயுதங்களை பொது மக்கள் வாழும் பகுதிகளுக்குள் நகர்த்தியுள்ளார் கடாபி. இதன் காரணமாக ஆயுதக்களஞ்சியங்களின் மீது குண்டுவீசும் நேட்டோவின் முயற்சி பொது மக்கள் இலக்கு நோக்கி நகரக்கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. சென்ற வாரம் நேட்டோ வீசிய குண்டுகள் பொது மக்கள் வாழிடங்களில் விழுந்து பலரைக் கொன்றது தெரிந்ததே. மறுபுறம் கடாபி வெடி பொருட்களையும், ஆயுதங்களையும் வீடு வீடாக நகர்த்தியுள்ளார் என்ற கருத்தை நேட்டோ முன் வைத்திருப்பதும் சந்தேகம் தருவதாகவே உள்ளது. வருங்காலங்களில் ஆப்கானைப் போல பொது மக்கள் வாழிடங்களில் வீசப்படும் குண்டுகளுக்கு நேட்டோ நியாயம் கற்பிக்க இது வசதியாக Buy cheap Bactrim இருக்கும். ஆனால் இத்தனை மாதங்களாக கடாபி பதவி விலகாமல் தாக்குப் பிடிப்பது அவருடைய திறமைக்கு சான்றாகவும் இருப்பதை மறுக்க முடியாது.

Add Comment