கிர்கிஸ்தான் இனக் கலவரம்-சிக்கிக் கொண்ட77 இந்திய மாணவர்கள், பேராசிரியர் மீட்பு

கிர்கிஸ்தான் இனக் கலவரத்தில் சிக்கித் தவித்து வரும் இந்திய மாணவர்களில் இதுவரை 77 மாணவர்களும், ஒரு பேராசிரியரும் பத்திரமாக மீட்கப்பட்டு தலைநகர் பிஷ்கெக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

கிர்கிஸ்தானில், உஸ்பெக் இனத்தவருக்கு எதிராக கிர்கிஸ் இன மக்கள் பெரும் வன்முறையில் இறங்கியுள்ளனர். உஸ்பெக் மக்களை சரமாரியாக சுட்டுக் கொன்றும், தீயில் போட்டு எரித்தும், வீடுகள், வணிக நிறுவனங்களை தீவைத்துக் கொளுத்தியும் வருகின்றனர்.

இந்த வன்முறைக்கு இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஜலால்-அபாத், ஓஷ் ஆகிய முக்கிய நகரங்கள் வன்முறையின் பிடியில் சிக்கியுள்ளன. மேலும் பலநகரங்களுக்கு வன்முறை பரவிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் ஓஷ் மற்றும் ஜலால்-அபாத் நகர்களில் மருத்துவப் படிப்பு படித்து வரும் இந்திய மாணவர்கள் கலவரத்தில் சிக்கிக் கொண்டு தங்களது அறைகளிலேயே முடங்க நேரிட்டது.

உணவு, மின்சாரம், காஸ் சப்ளை என எதுவும் இல்லாததால் அவர்கள் பெரும் தவிப்புக்குள்ளானார்கள். ஓஷ் நகரில், 99 மாணவர்கள், ஒரு பேராசிரியர், ஒரு வர்த்தகர் ஆகியோரும், ஜலால்-அபாத் நகரில் 15 இந்தியர்களும் சிக்கித் தவித்து வருகின்றனர்.

இதையடுத்து அவர்களை மீட்க இந்திய தூதரகம் நடவடிக்கையில் இறங்கியது. இதன் ஒரு கட்டமாக ஓஷ் நகரில் சிக்கியிருந்தவர்களில் ஒரு பேராசிரியர் மற்றும் 77 மாணவர்களை கடும் சிரமத்திற்கு மத்தியில் மீட்ட இந்திய அதிகாரிகள் அவர்களை தலைநகர் பிஷ்கெக் கொண்டு சென்றுள்ளனர். மற்றவர்களையும் மீட்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அலுவலகம் தெரிவிக்கையில், கிர்கிஸ்தானில் சிக்கியுள்ள இந்திய குடிமக்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் இல்லாத வகையில் மீட்பு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்திய தூதரகத்தால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்தியர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும். அங்கு தற்போது நிலைமை மிகவும் கடினமாக உள்ளது. எனவே கிர்கிஸ்தான் Buy Doxycycline அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு முடிந்தவரை இந்தியர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் கூடுதல் நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

Add Comment