கடையநல்லூர் பகுதியில் மணல் தட்டுப்பாடு கட்டுமான பணிகள் பாதிப்

கடையநல்லூர் : கடையநல்லூர், செங்கோட்டை பகுதிகளில் கடுமையான மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு லோடு மணல் 9 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் கட்டட பணிகள் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் கடுமையான விலையில் மணல் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களால் கூறப்பட்டு வந்தது மட்டுமின்றி கட்டுமான தொழில்களும் பெரிதும் பாதிக்கப்பட்டன. தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து கொண்டுவரப்படும் 2 யூனிட் மணல் 18 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. கடுமையான மணல் தட்டுப்பாட்டால் கட்டுமான பணிகள் பெருமளவில் தடைபட்டு நின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் மணல் தட்டுப்பாடு குறையும் என்பதுடன் மணலின் விலையும் வெகுவாக குறையும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கான நடவடிக்கைகள் தமிழக அரசின் Ampicillin online மூலம் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மணல் விலை குறைவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

இதனிடையில் கடையநல்லூர், செங்கோட்டை பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான அளவில் மணல் தட்டுப்பாடு காணப்பட்டது. உள்ளூரில் இருந்து மணல் எடுக்கப்படாத நிலையில் தற்போது விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் உள்ள வெம்பக்கோட்டையிலிருந்தும், திருச்சி மாவட்டத்திலிருந்தும் மணல் கொண்டு வரப்படுவதாக கூறப்படுகிறது.

இவற்றில் திருச்சியிலிருந்து கொண்டு வரப்படும் 2 யூனிட் மணல் 24 ஆயிரம் ரூபாய்க்கும், வெம்பக்கோட்டையிலிருந்து கொண்டு வரப்படும் 2 யூனிட் மணல் சுமார் 9 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கடுமையான மணல் விலை காரணமாக இப்பகுதிகளில் கட்டுமான பணிகள் பெருமளவில் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மணல் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் காரணமாக அரசு மற்றும் தனியார் கட்டுமான பணிகளும் தடைபடக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் மணல் குறைந்த விலைக்கு கிடைத்திடவும், தட்டுப்பாடின்றி பயன்பாட்டிற்கு கிடைத்திட செய்யும் வகையில் உள்ளூர் மாவட்டத்திலேயே இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென கட்டுமான பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நன்றி :தினமலர்

Add Comment