கட்சி மாறி ஓட்டு ? பயத்தில் ராஜஸ்தான் எம்.எல்.ஏ., க்கள் ஓட்டலில் அடைப்பு

ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ., கட்சி மேலிடம் தனது எம்.எல்.ஏ., க்களுக்கு வித்தியாசமான உத்தரவை பிறப்பித்துள்ளது. வருகிற 17ம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் Amoxil online ஒரு சில எம்.எல்.ஏ., க்கள் கட்சி மாறி ஓட்டளிக்கும் அபாயம் இருப்பதாக கட்சி மேலிடம் கருதுகிறது. இதற்காக எம்.எல்.ஏ., க்களிடம் குதிரை பேரமும் நடந்துள்ளது கட்சி மேலிடத்துக்கு தெரிய வந்தது. இந்நிலையில் தங்கள் எம்.எல்.ஏ.,க்கள் விலை போவதை த‌விர்க்க பா.ஜ., மேலிடம் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. எல்லா எம்.எல்.ஏ., க்களும் அடுத்த 2 நாட்களுக்கு கட்சி ஏற்பாடு செய்துள்ள ரிசார்டிலேயே தங்குமாறு பணிக்கப்பட்டுள்ளனர். பா.ஜ., அறிவித்துள்ள 2 வேட்பாளர்களும் வெற்றி பெற 82 ஓட்டுகள் வேண்டும். 3 ஓட்டுகள் குறைவாக இருக்கிறது. இதற்காக பா.ஜ., சுயேச்சைகளை அணுகி வருகிறது. பா.ஜ., பொதுச்செயலாளர் வெங்கய்யா நாயுடு பா.ஜ., நிச்சயம் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் அதன் எம்.எல்.ஏ., க்களை நகரை விட்டு வெளியே செல்லக் கூடாது என தெரிவித்துள்ளது.

Add Comment