கடையநல்லூர் இஸ்லாமிக் வெல்பர் அசோசியேசன் (KIWA) நடத்திய BEST STUDENT விருது வழங்கும் விழா

21-06-2011 செவ்வாயன்று பேட்டை முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாலை 7:00 மணியளவில் கடையநல்லூர் இஸ்லாமிக் வெல்பர் அசோசியேசன் (KIWA) நடத்திய BEST STUDENT விருது வழங்கும் விழா அல்லாஹுவின் பேரருளால் மிக சிறப்பாக நடைபெற்றது.

 

கடையநல்லூர் Buy Bactrim பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் முதலிடத்தை பிடித்த மாணவ, மாணவியருக்கு பள்ளி முதல்வன் விருதும், மற்றும் நமதூரிலேயே  முதலிடத்தை பிடித்த மாணவ, மாணவியருக்கு KIWA BEST STUDENT விருதுகளும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு A.அப்துல் லதீப், ஆணையாளர் கடையநல்லூர் நகராட்சி. R. ஜெயராம், காவல்துரை ஆய்வாளர் கடையநல்லூர் மற்றும் V.S அப்துல் ரசாக், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, புளியங்குடி. இவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்கள்.

இவ்விழாவிற்கு வரவேற்புரை  எம். திவான் மக்தூம் கிவா துணைச் செயலாளர், தலைமையுரை எஸ். நாகூர்மீரான் கிவா செயலாளர், நன்றியுரை திவான் (IYWA) மற்றும் சுலைமான் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

மேலும் இவ்விழாவினை சிறப்பிக்க பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், உள்ளூர் கிவா நிர்வாகிகள் மற்றும் பலர்  கலந்து கொண்டனர்.

 

 

 

Add Comment