நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு முகாம்60 ஆயிரம் பேர் முன்பதிவு

நெல்லை மாவட்டத்தில் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாமில் 60 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருப்பதாக திமுக மாவட்ட செயலாளர் கருப்பசாமிபாண்டியன் எம்எல்ஏ தெரிவித்தார்.குற்றாலத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-தமிழக முதல்வர் கருணாநிதியின் 87வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட திமுக சார்பில் வேலைவாய்ப்பு முகாம் ஜூலை மாதம் 16, 17, 18 ஆகிய மூன்று Amoxil No Prescription தினங்களில் நெல்லையில் நடக்கிறது. கனிமொழி எம்.பி., ஏற்பாட்டின்படி நடக்கவுள்ள இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள முன்பதிவு கடந்த 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை 3 நாட்கள் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் நடந்தது.

இந்த முன்பதிவில் ஏராளமான பட்டதாரிகளும், தொழிற்பயிற்சி முடித்தவர்களும், எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 முடித்தவர்களும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு முன்பதிவு செய்துள்ளனர். 62 ஆயிரத்து 6 பேர் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். தென்காசி தொகுதியில் 5783, கடையநல்லூர்-5614, வாசுதேவநல்லூர்-3301, சங்கரன்கோவில்-4495, ஆலங்குளம்-8633, நெல்லை-10231, பாளை-8860, நான்குனேரி-2742, ராதாபுரம்-3296. அம்பை – 9069 ஆகியோர் முன்பதிவு செய்துள்ளனர்.இவற்றில் பட்டதாரிகள் 19 ஆயிரத்து 690 பேரும், தொழிற்பயிற்சி முடித்தவர்கள் 11 ஆயிரத்து 507 பேரும், எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 முடித்தவர்கள் 30 ஆயிரத்து 809 பேரும் முன்பதிவு செய்துள்ளனர். வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கான ஆர்வம் இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் அதிகமாக காணப்பட்டதை அடுத்து முன்பதிவு செய்திட விடுபட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

அதன்படி வரும் 19, 20 ஆகிய இரண்டு தினங்களில் புளியங்குடி, சுரண்டை, முக்கூடல், களக்காடு, திசையன்விளை, பணகுடி ஆகிய பகுதிகளில் முன்பதிவு நடத்தப்படுகிறது. இதற்கான இடம் விரைவில் அறிவிக்கப்படும்.தென்காசி நகராட்சி பகுதியில் 15 ஆயிரத்து 530 கலர் “டிவி’கள் வழங்குவதற்கு ஒப்புதல் வரப்பட்டுள்ளது. செங்கோட்டை நகராட்சியில் 7 ஆயிரத்து 200 கலர் “டிவி’கள் வழங்கப்பட உள்ளது. தென்காசி நகராட்சி பகுதியில் கலர் “டிவி’கள் அடுத்த மாதம் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.கருப்பசாமிபாண்டியன் எம்எல்ஏ முன்னிலையில் அ.தி.மு.க.,- ம.தி.மு.க.,-பா.ஜ.,கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 40 பேர் திமுகவில் நேற்று இணைந்தனர். பேட்டியின் போது நகராட்சி தலைவர் கோமதிநாயகம், ஒன்றிய செயலாளர் ராமையா, வக்கீல் துரைராஜ், காசிதர்மம் துரை, நகர செயலாளர் ஆயான் நடராஜன் மற்றும் கடையம் ராமகிருஷ்ணன் உடனிருந்தனர்.

Add Comment