செம்மொழி மாநாடு; செங்கோட்டையில்இருந்து சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை

கோவை செம்மொழி மாநாட்டிற்கு கன்னியாகுமரியில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படுவதை போல செங்கோட்டையில் இருந்து கோவைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட வேண்டுமென பீட்டர் அல்போன்ஸ் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.கோவையில் தமிழ் செம்மொழி மாநாடு வரும் 23ம் தேதி துவங்குகிறது. இதற்கான விழிப்புணர்வு பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் செம்மொழி மாநாட்டிற்கு செங்கோட்டையில் இருந்து கோவைக்கு சிறப்பு ரயில் இயக்கிட வேண்டுமென பீட்டர் அல்போன்ஸ் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து கடையநல்லூரில் அவர் கூறியதாவது:-கோவையில் செம்மொழி மாநாட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அனைத்து துறைகளும் கோவையில் Levitra No Prescription சங்கமித்து வரும் நிலையில் தமிழ் புலவர்கள், கவிஞர்கள் மற்றும் பொதுமக்களின் பார்வை கோவையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. செம்மொழி மாநாட்டை சிறப்பு செய்யும் வகையில் தென்னக ரயில்வே சார்பில் கன்னியாகுமரியில் இருந்து கோவைக்கு சிறப்பு ரயில் இயக்கிட அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை போன்று செங்கோட்டையில் இருந்தும் கோவைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட வேண்டும். நான்கு நாட்கள் சிறப்பு ரயில் இயக்குவதற்கு வசதியாக இதற்கான நடவடிக்கையை தென்னக ரயில்வே மேற்கொள்ள வேண்டும். இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும் பட்சத்தில் செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர் பகுதி மக்கள் அதிகமான அளவில் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படக்கூடும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Add Comment