கடையநல்லூரில் பரவி வரும் மர்மக் காய்ச்சலின் பொருட்டு இந்த விழிப்புணர்வு பிரசுரம்

வருமுன் காப்பதை விட்டு விட்டு வந்தபின் அழுது யாருக்கு என்ன பயன் !

அஸ்ஸலாமு அலைக்கும்
இன்னல் எனும் இருட்டறைக்கு
இன்பம் எனும் ஒளியளித்து
இம் மண்ணுலக மானிடர்களை
இமய அரணாய்க் காக்கும்
இறைவனுக்கே புகழனைத்தும் உரியது!…

கடையநல்லூரில் பரவி வரும் மர்மக் காய்ச்சலின் பொருட்டு இந்த விழிப்புணர்வு பிரசுரம் .

சுகாதார சீர்கேட்டை மாற்றியமைக்க நகராட்சி அலுவலர்களோ தமிழக அரசோ மட்டும் நினைத்தால் போதாது .மக்களாகிய நாமும் அதில் அதிக பங்குகொள்ளவேண்டும் .காலை பொழுதுகளில் விசில் அடித்துக்கொண்டு குப்பைகளைக் கேட்டு வரும் ஊழியர்களிடம் நமதூர் வாசிகளில் பாதிபேர் குப்பைகளை கொட்டுவதில்லை .காரணம் சோம்பேறித்தனம் கூடிய மெத்தனப்போக்கு .மேலும் மாமிசக் கழிவுகள் மட்றும் மீன் கழிவுகளைப் பொதுமக்கள் அருகாமாயில் உள்ள கழிவு நீரோடைகளிலோ , சாக்கடைகளிலோ நேரடியாகப் போட்டு சுகாதார சீர்கேட்டை உருவாக்குகின்றனர் .அது மட்டுமல்லாது புகையிலை போட்டு எச்சில் உமிழ்வது போன்ற நோய்க் காரணிகளை இந்த சமூகத்தில் நேரடியாகவே நாம் பரப்பி வருகின்றோம் .

மேலும் பல வீடுகளின் கழிவறைகளில் பிரத்தியேகமான தொட்டிகள் கட்டாமல் நேரடியாக கழிவறைக் கழிவுகளை சாக்கடையோடும் , கால்வாய்களோடும் இணைத்துள்ளனர் .இதனால் அந்த வீடுகளில் உள்ளவர்களுக்கு மட்டுமல்லாது பக்கத்துக்கு வீட்டருகளுக்கும் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது .மேற்கூறிய கழிவுகளில் அமரும் கொசுக்கள் ,ஈக்கள் போன்ற உயிரினங்கள் பல்வேறு நோய்களை மக்களிடையே பரப்பி வருகிறது .சுற்றுச்சூழல் மாசுபாட்டின் ஆரம்ப நிலை இதுவேயாகும் .

மழைக்காலங்களில் கழிவுநீர் தேங்கிக்கிடக்கும் பகுதிலிருந்து உருவாகும் கொசுக்கள் டெங்கு காய்சலை உருவாக்குகிறது .எனவே மழைநீர் தேங்கி சாக்கடையாக மாறும் முன்னர் அதனை மூட வழிவகை செய்யவேண்டும் .இதனை அரசாங்கம் தான் செய்ய வேண்டுமென்பதல்ல .பொதுமக்களாகிய அனைவருக்கும் அதற்குரிய கடமை இருக்கிறது Levitra No Prescription என்பதை நினைவில் கொள்ள வேண்டும் .பல உயிர்களை காக்கும் இதுவே மிகப்பெரிய சேவையாகும் ,இது மட்டுமல்லாது ஒரு பகுதியில் சாக்கடைக் கழிவு வெளியேறுதல் ,கழிவு நீர்த் தேக்கங்கள் இருத்தல் ,தண்ணீர் வராமை,கொசுக்கடி குப்பைதொடிகள் அகட்றப்படாமல் இருத்தல் போன்ற சுகாதார சீர்கேடுகளை உடனடியாக நகராட்சி சுகாதார ஆய்வாளரிடம் ,அந்த பகுதி இளைஞர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் .நகராட்சி அலுவலர்கள் ,அரசு அலுவலர்கள் மக்களுக்கு தொண்டு செய்யவே உள்ளனர் என்பதை மனதில் கொள்ளவேண்டும் .அவர்கள் நமக்கு பணியாட்ற தயாராக இருக்கின்றனர் .

வீட்டில் நீரை சுத்தமான முறையில் நன்கு சுடவைத்து பருகுங்கள் .மாதம்தோறும் தண்ணீர் தொட்டியை சுத்திகரித்து பயன்படுத்துங்கள் .கழிவுப் பொருள்களை வீட்டில் தனியாக ஒதுக்கி வைத்து காலையில் வரும் நகராட்சி பணியாளர்களிடம் ஒப்படையுங்கள் .கழிவு நீர்த் தேக்கங்கள் உடனே மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொள்ளுங்கள் .மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை உட்கொள்ளதீர்கள் .கடையில் வாங்கும் காய்கறிகள் ,பழங்கள் கழுவிய பின்பு உட்கொள்ளுங்கள் மட்றும் இதுபோன்ற விழிப்புணர்வை தங்களின் வீட்டார்களிடமும் , பிறரிடமும் தெரியப்படுத்துங்கள் .மக்களே சிந்திப்பீர் !

மர்ம காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு

கை ,கால்களின் மூட்டுகளில் வலி ,உடல் சோர்வு ,தலைவலி ஆகிய காரணிகள் இருப்பின் மருத்துவரின் ஆலோசனையுடன் ரத்தப் பரிசோதனை செய்து அணுக்களின் எண்ணிக்கையைக் கண்டறிந்து உடனடியாக அதற்குரிய மருத்துவ பரிசீலனை செய்ய வேண்டும் .அசாதாரணமாக இருந்துவிட வேண்டாம் .நாளை நமது வீட்டில் வரும் முன் விழிப்புணருடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் .

எங்கள் இறைவா ! எங்கள் அனைவரின் பாவங்களை மன்னித்து ,நோய் இல்லாத நிம்மதியான வாழ்வை எங்களுக்கு வழங்கி அருள்புரிவாயாக ! ஆமீன் .

“எவர் ஓர் ஆத்மாவை (உயிரை ) வாழ வைக்கிறாரோ
அவர் மனிதர்கள் அனைவரையும் வாழவைப்பவரைப் போலாவார் ”
அல் குர்ஆன் 5:36″

ரத்த தானம் செய்வோம் !
இயலாமைப் பண்பை ஒழிப்போம் !

என்றும் மக்கள் பணியில்
கடையநல்லூர் இக்பால் நகர் முஸ்லிம் குடி இருப்போர் நல உரிமைச் சங்கம்
Reg No.54/2011
இக்பால் நகர் இளைஞர்கள் -9976013480
AL-ELIGHT ASSOCIATION & KNOCK OUT DASHERS-9965913593
ஸ்பீடு ரத்ததான சேவை மையம் ,உங்கள் நண்பன் (மாத இதழ்)
திருக்குறள் அரசுக் கழகம் -9092959012,8807663092
கடையநல்லூர்
by
நல்லூர்கதிரவன்

Add Comment