சிறையில் மகனை நினைத்து கனிமொழி ஏக்கம்

2ஜி வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் 15ஷ்10 தனிமைச் அறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக எம்பி கனிமொழி தனது மகனை நினைத்து ஏக்கத்தில் இருப்பதாகவும், சிலசமயம் கதறி அழுவதாகவும் சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிறையில் இருந்தாலும் கனிமொழி முன்பு புன்னகையுடன் காணப்பட்டதாகவும், அவரது ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்ததில் இருந்து அந்த புன்னகையைக் காணவில்லை என்றும் சிறை வட்டாரங்கள் தெரிவித்தன. இப்போதெல்லாம் அவர் விரக்தி. சோகத்துடன் காணப்படுகிறார் என்றும் சில சமயம் கதறி அழுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கனிமொழி 2ஜி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு மே 20-ம் தேதி முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முதல் ஒருவாரம் நன்றாக இருந்தார். பின்னர் அவரது ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதும் மிகுந்த வருத்தம் அடைந்தார்.
சிறையில் எழுதுவது, புத்தகங்கள் படிப்பதைத் தவிர தொலைக்காட்சியையும் அவர் பார்க்கிறார். அவரது அறையில் 28 சானல்களுடன் கேபிள் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
உங்களை வருத்தமடையச் செய்தது எது என்று அவரிடம் கேட்டால் மகனைப் பிரிந்து இருப்பதுதான் என்று Lasix No Prescription கூறுவார். எப்போதும் குறைவாகவே பேசும் அவர், அப்படியே பேசினாலும் தனது மகனைப் பற்றித்தான் பேசுவார் என்று சிறை வட்டாரங்கள் கூறின

Add Comment