தமிழகத்தில் புதிய முஸ்லிம் அமைச்சர் புதனன்று பதவியேற்பு.

புதிதாக அமைச்சர் பதவியேற்று ஒரு வாரத்தில் மரணம் தழுவிய மரியம் பிச்சைக்குப் பதிலாக முஸ்லிம் கோட்டாவில் ராணிப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. முகமது ஜான் புதிய அமைச்சராக புதன்கிழமை பதவியேற்கிறார்.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை மற்றும் வக்ப் வாரியம் ஆகிய துறைகள் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதே சமயம், மரியம் பிச்சை வகித்து வந்த சுற்றுச்சூழல்த்துறை அமைச்சராக டி.கே.எம். சின்னையா நீடிப்பார் என்று அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

மேலும் ஒரு சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, ஊரக தொழில்துறை அமைச்சராக சி.சண்முகவேலு நியமிக்கப்பட்டுள்ளார். தொழில்துறை அமைச்சராக எஸ்.பி. வேலுமணி நியமிக்கப்பட்டுள்ளார். சிறப்பு திட்ட அமலாக்கத்துறை அமைச்சராக எம்.சி.சம்பத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கால்நடைத்துறை அமைச்சராக என் ஆர். சிவபதி நியமிக்கப்பட்டுள்ளார். விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக Bactrim No Prescription சி. கருப்பசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

Add Comment