கேஸ் விலை: சிலிண்டருக்கு ரூ.40 வரை குறைத்தது டெல்லி அரசு!!

டெல்லி: விற்பனை வரி குறைப்பு மூலம் சமையல் எரிவாயு விலையை சிலிண்டருக்கு ரூ 40 வரை குறைத்துள்ளது டெல்லி அரசு.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு டீசல், மண்ணெண்ணெய், கேஸ் விலைகளை உயர்த்தியது. நாடு முழுவதும் எதிர்கட்சியினர் விலை உயர்வை கண்டித்து கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர்.

buy Doxycycline online justify;”>விலையேற்றத்தை குறைக்க முடியாது என்றும் அதற்கு பதிலாக மாநில அரசுகள் விற்பனை வரியைக் குறைக்க வேண்டும் என மத்திய அரசு கூறிவிட்டது. அதன்படி மேற்குவங்கம், கேரள மாநிலங்கள் விற்பனை வரியைக் குறைத்துள்ளன.

இப்போது ஷீலா தீக்ஷித் தலைமையிலான டெல்லி மாநில அரசும் விற்பனை வரியைக் குறைத்துள்ளது. குறிப்பாக சமையல் எரிவாயு மீதான வரியை கணிசமாகக் குறைத்துள்ளது.

இதனால் கேஸ் விலை 40 ரூபாய் வரையிலும், டீசல் விலை லிட்டருக்கு 37 பைசாவும் குறைந்துள்ளது.

மேலும் சில மாநிலங்களும் எரிபொருள்கள் மீதான விற்பனை வரியைக் குறைக்க உத்தேசித்து வருகின்றன.

Add Comment