தமிழக அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம்

சென்னை, ஜூன் 27: முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழக அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன; பிற்படுத்தப்பட்டோர்-சிறுபான்மையினர் நலத் துறையின் புதிய அமைச்சராக ராணிப்பேட்டை எம்.எல்.ஏ. ஏ.முகமது ஜான் (62) நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் புதன்கிழமை பதவியேற்பார் Levitra online என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழக அமைச்சர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது.
அமைச்சர்களின் மாற்றப்பட்ட இலாகாக்கள் தொடர்பாக ஆளுநர் மாளிகை திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி (முன்பு வகித்த பதவி அடைப்புக்குறிக்குள்):
டி.கே.எம். சின்னையா – சுற்றுச்சூழல் துறை அமைச்சர் (பிற்படுத்தப்பட்டோர் – சிறுபான்மையினர் நலம், கூடுதல் பொறுப்பாக சுற்றுச்சூழல் துறை).
எம்.சி.சம்பத் – சிறப்புத் திட்டங்கள் அமலாக்கம் (கிராமத் தொழில் மற்றும் சிறு தொழில் துறை அமைச்சர்)
எஸ்.பி. வேலுமணி – தொழில், கனிம வளத் துறை அமைச்சர் (சிறப்புத் திட்டங்கள் அமலாக்கம்)
சி.சண்முகவேலு – கிராமத் தொழில் துறை அமைச்சர் (தொழில் துறை அமைச்சர்)
என்.ஆர்.சிவபதி – கால்நடை பராமரிப்பு, பால் வளத் துறை அமைச்சர் (விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்)
சி.கருப்பசாமி – விளையாட்டு, இளைஞர் நலன் துறை அமைச்சர் (கால்நடை பராமரிப்பு).
புதிய அமைச்சர் முகமது ஜான்: ராணிப்பேட்டை எம்.எல்.ஏ. முகமது ஜான், அரசுப் பள்ளி ஆசிரியராக சிறிது காலம் பணியாற்றியவர். கடந்த 15 ஆண்டுகளாக வேலூர் மாவட்ட அதிமுக சிறுபான்மைப் பிரிவுச் செயலாளராக இருந்து வருகிறார்.
தி.மு.க. மாவட்டச் செயலாளர் ஆர்.காந்தியை எதிர்த்து போட்டியிட்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றார். முகமது ஜானின் மனைவி சைனா பர்வீன். இவர்களுக்கு ஒரு மகளும், மூன்று மகன்களும் உள்ளனர்.
அமைச்சரவையில் இஸ்லாமியர்: தமிழக அமைச்சரவை கடந்த மாதம் பொறுப்பேற்றபோது மொத்தம் 33 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களில் மரியம் பிச்சை மட்டுமே இஸ்லாமியச் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இந்த நிலையில், மரியம்பிச்சை வாகன விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, முகமது ஜான் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Add Comment