என்றாவது ஒருநாள்…..

என்றாவது ஒருநாள்…..

என்றாவது ஒருநாள் என

எண்ணி எண்ணி Cialis No Prescription ஒடிவிட்டது

எண்ணிலடங்கா நாட்கள்!!

முத்தங்கள் பழகிப் போயின

கைப்பேசியில் நமக்கு – இன்னும் புரியாமல்

இரைச்சல் என கொடுத்துவிட்டு சென்றிடும்

நம் பிள்ளை உன்னிடம்!!

இணையாத நமக்கு

பெருநாள் கூட வெகுதொலைவில்

நீயொரு நாளில் நான் ஒரு நாளில்!!

துடித்துக்கொண்டிருக்கும் என் மனம்

உனக்கோ இங்கே கொதித்துக்கொண்டிருக்கும்

வெயிலைப் பற்றி கவலை!!

தூரமாக இருந்தாலும்

பாரமாகத் தோன்றாத

நம் பாசம்!!

நாட்டிற்கே வந்தாலும்

நாலாவது நாளே அழுதுவிடுவாய்;

என் விடுமுறை முடிவின் நாளை எண்ணி!!

நீ சொல்லிக் கொடுத்து சொல்லிக் கொடுத்து

பேசும் நம் பிள்ளை கைப்பேசியில்;

என் சந்தோஷம் என்னவென்று

உனக்குத்தான் எத்தனை பரிட்சயம்!!

நோய் என்று சொன்னாலும்

நொந்து இரண்டு சொட்டுக்

கண்ணீர் மட்டும்தான்

துணையாய் கட்டிலுக்கு!!

வந்துவிடுவேன் என

வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தாலும்

விழிகளில் ஈரம் மட்டுமே மிச்சமாய்!

கானல் நீராய்

காணாமல் போன நம் கனவுகள்;

சோலைக்காக நம் பாசங்கள்

பாலையில் பல் இழிக்க;

நாடு திரும்புமுன் நட்டுவிட்டுச் செல்வேன்

கொடிக்கம்பத்தை “ஆழம் மிகுந்தப் பகுதி” என

அபாய சங்கு ஊதிவிட்டு!!!

-யாசர் அரஃபாத்

Add Comment