கடையநல்லூர் பெரியாற்று குடிநீர் திட்ட சீரமைப்பு பணிக்கு ரூ. 5 கோடி ஒதுக்கீடு

கடையநல்லூர் நகராட்சியில் பெரியாற்று படுகை குடிநீர் திட்டத்தின் சீரமைப்பு பணிகளுக்காக 5 கோடி ரூபாய் நீதி ஒதுக்கீடு செய்யப்பட இருப்பதாக எம்எல்ஏ., செந்தூர்பாண்டியன் தெரிவித்தார். கடையநல்லூர் நகராட்சியில் பொதுமக்களின் குடிநீர் வசதிக்காக பெரியாற்று படுகை மற்றும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. குடிநீர் அனைத்து பகுதிகளுக்கும் சீராக கிடைக்கும் வகையில் 22 கோடி ரூபாய் புணரமைப்பு பணி மேற்கொள்ள குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் நகராட்சி பகுதியில் குடிநீர் விநியோகத்திற்காக பிரதான திட்டமாக பயன்படுத்தப்பட்டுவரும் பெரியாற்று படுகை குடிநீர் திட்டத்திற்கு தமிழக அரசு மூலம் சீரமைப்பு பணிகளுக்காக ஏற்பாடு செய்யப்படும் என தேர்தலின்போது அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட செந்தூர்பாண்டியன் வாக்குறுதி அளித்திருந்தார். அதனடிப்படையில் தமிழக அரசின் குடிநீர் வழங்கல் துறையின் மூலமாக கடையநல்லூர் நகராட்சில் பெரியாற்று படுகை திட்டத்தில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உரிய ஏற்பாடு செய்யும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதற்கான ஆய்வு பணிக்காக நகராட்சி சார்பில் 2 லட்சம் ரூபாய் நிதி வழங்கிட தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து Buy Levitra கடையநல்லூர் எம்எல்ஏ., செந்தூர்பாண்டியன் கூறுகையில், “”கடையநல்லூர் நகராட்சியில் சீராக குடிநீர் வழங்கும் வகையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டுவரும் பெரியாற்று படுகை குடிநீர் திட்டத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் பெரியாற்றிலிருந்து வரக்கூடிய மெயின் லைன்கள் முற்றிலும் மாற்றப்படுவதுடன் தலைமை நீரேற்றும் நிலையத்தில் அனைத்து சீரமைப்பு பணிகளும் நடத்திட 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, நகராட்சி நிர்வாகம் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணிகளை மேற்கொள்ள ஆய்வு பணிகள் நடத்திட 2 லட்சம் ரூபாய் நகராட்சி சார்பில் ஒதுக்கீடு செய்ய கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் அடிக்கடி பழுதடைந்து காணப்பட்டுவந்த மெயின் லைன்கள் விரைவில் சீரமைக்கப்பட்டு பெரியாற்று படுகையிலான குடிநீர் விநியோகம் சீராக கிடைத்திட 5 கோடி ரூபாய் செலவில் பணிகள் விரைவில் தொடங்கப்படும்” என்றார். எம்எல்ஏ., உடன் மாவட்ட துணை செயலாளர் மூர்த்தி, பொருளாளர் இலஞ்சி சண்முகசுந்தரம், தொகுதி செயலாளர் பொய்கை மாரியப்பன், ஒன்றிய செயலாளர் வசந்தம் முத்துப்பாண்டி, நகர செயலாளர் கிட்டுராஜா, எம்எல்ஏ. உதவியாளர் குருசாமி, குட்டியப்பா இருந்தனர்.

Add Comment