கணவன் – மனைவி படுக்கையறை காட்சியைப் படம் பிடித்த வாலிபர்கள் கைது!

படுக்கையில் கணவனுடன் இருந்ததை ரகசியமாக படம்பிடித்த வாலிபர்களை ஊர் மக்கள் ஓட ஓட விரட்டிப் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர்.

கேரள Buy Amoxil Online No Prescription மாநிலம் மலப்புறம் மாவட்டத்திலுள்ள மஞ்சேரி பகுதியில் ஒரு மாடி வீட்டின் படுக்கை அறை கூரைப் பகுதியில் உள்ள ஜன்னலிலிருந்து லேசான வெளிச்சம் தென்பட்டது. அதை பார்த்ததும், படுக்கை அறையில் கணவருடன் படுத்திருந்த மனைவி அதிர்ச்சியடைந்து அலறினார்.

திருடன், திருடன் என கூக்குரல் எழுப்பியதைத் தொடர்ந்து சப்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்து திரண்டனர். அப்போது 4 வாலிபர்கள் அவ்வீட்டின் கூரையிலிருந்து இறங்கி ஓடினர். பொதுமக்கள் அவர்களை விரட்டிச் சென்றதில், ஒரு வாலிபர் பிடிபட்டார். அந்த வாலிபரைப் பொதுமக்கள் காவல்துறையில் ஒப்படைத்தனர்.

காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்று நடத்தப்பட்ட விசாரணையில், பக்கத்து வீடுகளைச் சேர்ந்த 4 வாலிபர்கள் இணைந்து, செல்போன் கேமரா மூலம் படுக்கை அறை காட்சியைப் படம் பிடித்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, தப்பி ஓடிய 3 வாலிபர்களையும் காவல்துறையினர் பிடித்தனர். அவர்களிடம் இருந்து செல்போனைக் கைப்பற்றி காவல்துறையினர் சோதனை நடத்தியபோது அதில் படுக்கையறை காட்சி எதுவும் பதிவாகவில்லை என்பது தெரிய வந்தது.

எனினும் காவல்துறையினர் அந்த 4 வாலிபர்களையும் கைது செய்து சைபர் குற்றம் அல்லாத புதிய பிரிவில் வழக்கு பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Add Comment