தமிழகத்தில் 11 போலீஸ் எஸ்பிக்கள் இடமாற்றம்

தமிழகத்தில் 11 போலீஸ் எஸ்.பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

சென்னை சி.பி.சி.ஐ.டி. மெட்ரோ பிரிவு கூடுதல் எஸ்பியாக உள்ள சந்திரபாசு பதவி உயர்வு பெற்று சி.பி.சி.ஐ.டி. எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். சி.பி.சி.ஐ.டி. எஸ்பியாக உள்ள எஸ்.மல்லிகா, தமிழ்நாடு போலீஸ் அகாடமிக்கு மாற்றப்பட்டுள்ளா.

தமிழ்நாடு போலீஸ் அகாடமி எஸ்பியாக உள்ள கே.மோகன், திருச்சி ரயில்வே எஸ்பியாக பதவி ஏற்பார். திருச்சி ரயில்வே எஸ்பி எம்.விஜயலட்சுமி, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு தலைமையக எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை அம்பத்தூர் துணை கமிஷனராக உள்ள ஆர்.சமுத்திரபாண்டி, ஆவடி வீராபுரம் தமிழ்நாடு விசேஷ போலீஸ் படை கமாண்டன்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அம்பத்தூர் துணை கமிஷனராக தேனி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் எஸ்பி எம்.ஜான்செல்லையா பதவி உயர்வு கொடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆவடி தமிழ்நாடு விசேஷ போலீஸ் படை துணை கமாண்டன்டாக உள்ள ஐ.நஷீர் அகமது பதவி உயர்வு பெற்று மதுரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு எஸ்பி பி.முத்தையா மணிமுத்தாறில் உள்ள தமிழ்நாடு விசேஷ போலீஸ் படை கமாண்டன்டாக நியமிக்கப்படுகிறார்.

வேலூர் மாவட்ட போலீஸ் எஸ்பியாக உள்ள என்.அறிவுசெல்வம் Viagra online சென்னை பூக்கடை துணை கமிஷனராக பொறுப்பேற்பார்.

சென்னை திருவல்லிக்கேணி துணை கமிஷனர் அன்பு, வேலூர் மாவட்ட எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு எஸ்பியாக எஸ்.சாந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

Add Comment