தமிழக மீனவர்கள் 23 பேரும் ராமேஸ்வரம் திரும்பினர்

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 23 பேரும் இன்று ராமேஸ்வரம் திரும்பினர்.

ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 23 மீனவர்கள் கடந்த 20-ம் தேதி இலங்கை கடற்படையினரால் 5 படகுகளுடன் கைது செய்யப்பட்டனர்.

இலங்கைக் கொண்டு செல்லப்பட்ட அவர்கள் அனைவரும் அனுராதபுரம் சிறையில் அடைக்‍கப்பட்டனர்.

மீனவர்களை உடனடியாக விடுவிக்‍க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். இதேபோல், பல்வேறு கட்சித் தலைவர்களும் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தினர்.

காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கிய ராமேஸ்வரம் மீனவர்கள், இலங்கை அரசின் அறிவிப்புக்கு Buy Cialis Online No Prescription பிறகு தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்த நிலையில், அனுராதபுரம் சிறையில் அடைக்‍கப்பட்டிருந்த 23 மீனவர்களும், தலைமன்னார் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். 5 படகுகளுடன் அவர்களை விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, தமிழக மீனவர்கள் 23 பேரும் பின்னர், இந்திய கடற்படையிடம் ஒப்படைக்‍கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் இன்று பிற்பகல் ராமேஸ்வரம் திரும்பினர்.

Add Comment