படைத்தளத்தை விட்டு US வெளியேற பாக். உத்தரவு

இஸ்லாமாபாத் அருகேயுள்ள விமானப்படைத் தளத்தில் இருந்து வெளியேறுமாறு, அமெரிக்‍காவுக்‍கு பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு தென்மேற்கே 900 கிலோ மீட்டர் தொலைவில், அந்நாட்டின் விமானத் தளம் உள்ளது.

பலுசிஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள இந்த தளத்தை, தனது உளவுப் பணி மற்றும் ரகசிய ஏவுகணைத் தாக்‍குதலுக்‍கு அமெரிக்‍கா பயன்படுத்தி வந்தது.

இந்நிலையில், இந்த விமானப் படைத் தளத்தில் வெளியேறுமாறு அமெரிக்‍காவை பாகிஸ்தான் நிர்பந்தித்துள்ளது.

இஸ்லாமாபாத்தில் அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் அகமது Lasix No Prescription முக்‍தர் இத்தகவலை தெரிவித்தார்.

அல்காய்தா பயங்கரவாத இயக்கத் தலைவன் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பின்னர், அமெரிக்‍காவின் நடவடிக்‍கைகளை கட்டுப்படுத்த, பாகிஸ்தான் முயற்சி மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்‍கது.

Add Comment