கேரள அரசுக்கு வைகோ கண்டனம்

சென்னை, ஜூன் 30- முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரள அமைச்சர் கூறியுள்ள கருத்துக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முல்லைப் பெரியாறு பிரச்னையில் உண்மைக்கு மாறான பொய்ச் செய்திகளைப் பரப்புவதையே கேரள அரசு தொடர்ந்து செய்து வருவதாக கிறது. புதிய அணை கட்டுவது குறித்து கேரள அமைச்சர் கூறியிருப்பது கண்டனத்திற்குரியதாகும்.
முல்லைப் பெரியாறு வழக்கில் கேரள அரசு உச்ச நீதிமன்றத் தீர்ப்பை கண்டுகொள்ளாமல் அநீதியான ஒரு சட்டத்தையும் சட்டமன்றத்தில் நிறைவேற்றியது.
பென்னி குயிக் கட்டிய அணையில் 142 அடிக்கு தண்ணீரை உயர்த்திக் கொள்ள – ஏன் அதற்கு மேல் 152 அடி வரை உயர்த்திக் கொள்ள – தமிழ்நாட்டிற்கு எல்லா உரிமையும் உண்டு. புதிய அணை என்ற பேச்சுக்கே இடம் தர முடியாது.
பென்னி குயிக் கட்டிய அணையைச் சேதப்படுத்த முயன்றாலோ புதிய அணை கட்ட முயன்றாலோ, கேரளாவுக்குச் செல்கின்ற அனைத்துப் பாதைகளையும் மறித்து தமிழகம் பொருளாதார முற்றுகை போட நேரிடும் என்று கேரள அரசுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுக்க வேண்டும்.
புதிய அணையைக் கேரள அரசு அமைக்குமானால், பள்ளத்தில் அமையப் போகும் அந்த அணையிலிருந்து தண்ணீர் கொடுக்கவே முடியாமல் போய்விடும். கேரள அரசு நினைத்தாலும் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் கொடுக்க முடியாது.
பென்னி குயிக் கட்டிய அணை, கேரளாவில் உள்ள அனைத்து அணைகளையும் விட மிகவும் பலமானது ஆகும். ஏற்கனவே உச்ச நீதிமன்றம் அமைத்த இரண்டு நிபுணர்க் குழுக்கள், முல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ளது என்று திட்டவட்டமாக அறிக்கை சமர்ப்பித்தன.
கேரள அரசின் அராஜகமான போக்கைத் தடுத்து நிறுத்தும் வகையில், தமிழக அரசு எச்சரிக்கை செய்ய வேண்டும்.
இந்தியாவின் ஒருமைப்பாட்டில் உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் மத்திய அரசு, கேரள அரசின் அக்கிரமமான போக்கைத் தடுத்தாக வேண்டும்.
கேரள அரசு தான்தோன்றித்தனமாகத் தமிழ்நாட்டுக்கு விரோதமாக செயல்பட Lasix online முனைந்தால் மதிமுக நேரடியாகக் கிளர்ச்சியில் ஈடுபடும்.
இவ்வாறு தனது அறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார்.

Add Comment