உலகின் அதி நீளமான பாலம் சீனாவில் இன்று திறந்துவைப்பு!(Video)

சீனாவில் கடலுக்கு மேலாக Buy cheap Levitra கட்டப்பட்ட உலகின் அதி நீளமான பாலம் பொதுமக்கள் பாவனைக்கென இன்று வியழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. குயிங்டாஹோ ஹய்வான் எனப் பெயரிடப்பட்டுள்ள 42.4 கிலோமீற்றர் நீளமான இப்பாலம் சீனாவின் கிழக்குக் கரையோர நகரான குயிங்டாஹோவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இப் பாலமானது இதுவரைகாலமும் உலகின் நீளமான பாலம் என்ற பெருமையைப் பெற்றிருந்த அமெரிக்க லூசியான மாநிலத்தில் அமைந்துள்ள பாலத்தினை விட 3 மைல்கள் நீளம் கூடியதாகும். வெறும் 4 வருடங்களில் சுமார் 960 மில்லியன் பவுண்கள் செலவில் இப்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இப்பாலமானது 5,200 இற்கும் அதிகமான தூண்களை கொண்டுள்ளது. தினசரி 30 ஆயிரம் கார்கள் இப்பாலத்தில் பயணிக்கக் கூடியதாகவிருக்குமென தெரிவிக்கப்படுகிறது
by
நல்லூர்கதிரவன்

http://www.telegraph.co.uk/news/worldnews/asia/china/8607781/China-opens-worlds-longest-sea-bridge.html?utm_source=tmg&utm_medium

Add Comment