சென்னையில் வரலாறு காணாத மின்வெட்டு- நகரமே ஸ்தம்பித்தது- செயலிழந்தது உயர்நீதிமன்றம்

சென்னை நகரில் நேற்று வரலாறு காணாத அளவுக்கு பல மணி நேரம் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டதால் நகரமே பெரும் அவஸ்தைக்குள்ளானது. சென்னை உயர்நீதிமன்றத்தின் செயல்பாடுகளும் முடங்கின.

மின்வாரிய அதிகாரிகள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பாலை சந்தித்து நிலைமையை விளக்கி மன்னிப்பு கோரினர்.

தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு நிலவுகிறது. மின்பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள இந்த அவல நிலையைப் போக்க அரசு தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

சமீபத்தில் சென்னையிலும் ஒரு மணி நேர மின்வெட்டு அமலானது. பின்னர் இது 2 மணி நேரமாக அமலாகி வருகிறது. இருப்பினும் பல நேரங்களில் பல மணி நேரத்திற்கு மின்சாரம் இல்லாத நிலை நிலவுகிறது.

இந்த நிலையில் நேற்று சென்னை நகரில் காலை 9 மணி முதல் இரவு 10 மணிக்கு மேலும் பல மணி நேரத்திற்கு மின்வெட்டு நிலவியதால் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். பல பகுதிகளில் மக்கள் போராட்டங்களில் குதித்தனர். சென்னை உயர்நீதிமன்றமும் செயலிழந்தது.

உயர்நீதிமன்றத்தில் ஜெனரேட்டர்களை வைத்து சமாளித்துப் பார்த்தனர். ஆனால் ஜெனரேட்டர்களும் பின்னர் பழுதாகி விட்டன. இதனால் எமர்ஜென்சி லைட்டுகளை வைத்து வழக்குகளை நடத்திப் பார்த்தனர். அதுவும் நீடிக்கவில்லை. இதனால் ஒரு கட்டத்தில் நீதிபதிகள் வழக்குகளின் விசாரணைகளை நிறுத்த
வேண்டிய நிலை ஏற்பட்டது.

தலைமை நீதிபதி இக்பால் விசாரித்துக் கொண்டிருந்த கோர்ட்டிலும் மின்சாரம் இல்லாததால் அவர் பெரும் அதிருப்திக்குள்ளானார். அப்போது அவர் முன்பு ஆஜரான அரசு அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன் மின்வெட்டுக்கு மன்னிப்பு கோரினார். இருப்பினும் நீங்கள் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். மின்வாரியத்தினர்தான் கேட்க வேண்டும் என்றார். இதையடுத்து மின்வாரிய உயர் அதிகாரிகள் விரைந்து வந்து தலைமை நீதிபதியைச் சந்தித்து மன்னிப்பு கோரி நிலைமையை விளக்கினர்.

மக்கள் மறியல்

இதற்கிடையே தொடர் மின்வெட்டால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்புக்குள்ளானது. Buy cheap Amoxil இதையடுத்து மக்கள் ஆங்காங்கு மறியல் போராட்டங்களில் குதித்தனர். பெரம்பூர், பாரிமுனை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல பகுதிகளிலும் மக்கள் மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிட்டனர். ஆனால் அவர்களுக்கு அங்கு ஒரு பதிலும் கிடைக்கவில்லை. கரன்ட் இல்லை, நாங்கள் என்ன செய்வது என்பதே மின்வாரியங்கள் தந்த பதிலாக இருந்தது.

பல இடங்களில் இரவு 10 மணி வரையிலும் மின்சாரம் வரவில்லை. சிலஇடங்களில் நள்ளிரவைத் தாண்டிய பிறகுதான் மின்சாரம் வந்தது.

நகரில் மட்டுமல்லாமல் புறநகர்ப் பகுதிகளிலும் நேற்று பல இடங்களில் மின்வெட்டு மக்களை வாட்டி வதைத்தது.

Add Comment